twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல் முறையாக 200 அரங்குகளில் ரிலீஸ்!

    By Shankar
    |

    வாசிங்டன்(யு.எஸ்) அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்' புதிய வரலாறு படைக்கிறது.

    அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இந்தி பதிப்பை ஈராஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.

    தன் சாதனையை தானே உடைக்கும் சூப்பர் ஸ்டார்

    தன் சாதனையை தானே உடைக்கும் சூப்பர் ஸ்டார்

    தமிழ் மொழியில் மட்டும் கோச்சடையான் 100 திரையரங்குகளுக்கும் அதிகமாக அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. முன்னதாக எந்திரன் 85 அரங்குகளில் வெளியானது. இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் முந்தய சாதனையை அவரே முறியடிக்கிறார். 78 அரங்குகளில் வெளியான அஜீத்தின் ஆரம்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அட்மஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் வெளியிட்ட ஜில்லா மற்றும் வீரம் தலா 70 அரங்குகளில் வெளியானது. முன்னதாக, சூர்யாவின் சிங்கம் 2 படத்துக்கு 63 திரையரங்குகள் கிடைத்தன.

    3D யிலும் சாதனை

    3D யிலும் சாதனை

    கோச்சடையான் தமிழில், 80 திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. வேறு எந்த இந்திய மொழிப்படங்களும் இத்தனை 3D அரங்குகளில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் 3D யில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமும் கோச்சடையான்தான்.

    படையப்பா முதல் கோச்சடையான் வரை

    படையப்பா முதல் கோச்சடையான் வரை

    அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிர்வாக இயக்குனர் ராம் முத்து இதுகுறித்துக் கூறுகையில், "அமெரிக்காவில் இந்திய படங்களுக்கான வர்த்தக வாய்ப்பை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டாரின் படையப்பா, 32 ஆயிரம் டாலர்கள் முதலீட்டில் 200 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்தது. 2007ல் வெளியான சிவாஜி படத்தின் வசூல் இன்னும் பல மடங்குஅதிகரித்தது. கமல்ஹாசனின் தசாவதாரமும் சிவாஜிக்கு அடுத்த வசூலைக் கொடுத்தது.

    எந்திரன் வசூல்

    எந்திரன் வசூல்

    அமெரிக்க அரங்குகளில் எந்திரன் திரைப்படம் தமிழில் மட்டும் 1.6 மில்லியன் டாலர்களும், தெலுங்கு இந்தி உட்பட மூன்று மொழிகளிலும் சேர்த்து 2.6 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து புதிய வரலாறு படைத்தது.

    சாதனைகளை உடைக்கும்

    சாதனைகளை உடைக்கும்

    தற்போது மூன்று மொழிகளிலும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கோச்சடையான் முந்தய சாதனைகளை முறியடிக்கும்" என நம்புவதாக தெரிவித்தார்.

    முதல் வெளிநாட்டுப் படம்

    முதல் வெளிநாட்டுப் படம்

    மேலும் "அமெரிக்காவில் திரையிடப்படும் வெளிநாட்டு படங்களில், 200 அரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகும் முதல் படம் என்ற பெருமை 'கோச்சடையான்' படத்திற்கு கிடைத்துள்ளது,' என்றும் ராம் முத்து தெரிவித்தார்

    ப்ரீமியர் காட்சிகள்

    ப்ரீமியர் காட்சிகள்

    தமிழகத்தில் மே 9ம் தேதி வெள்ளிக்கிழமை கோச்சடையான் வெளியாகும் நிலையில், அமெரிக்கா முழுவதும் வியாழக்கிழமை ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. தியேட்டர் மற்றும் விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக அட்மஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

    எதிர்ப்பார்ப்பு

    எதிர்ப்பார்ப்பு

    முன்னதாக அமெரிக்காவில் எந்திரன் ரசிகர் காட்சிகள் மாபெரும் சாதனை படைத்தது. மோஷன் கேப்சரிங் டெக்னாலாஜி என்றாலும், மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் ரஜினி படம் என்பதால் அமெரிக்க ரசிகர்களிடமும் கோச்சடையான் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான அனிமேஷன் தொழில்நுட்பம் என்பதால் பெருமளவில் குடும்பத்தினர் தியேட்டர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    For the very first time in the US, an overseas film is going to release in more than 200 theaters. The film is none other than Rajini's Kochadaiiyaan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X