Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து
பெங்களூரு: ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார்.
பட தயாரிப்புக்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார்.
இதற்காக முரளி தாக்கல் செய்திருந்த ஆவணங்களுக்கு, ரஜினியின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்து போட்டிருந்தார்.
3
கேர்ள்ஃபிரெண்ட்..
ராயல்
என்ஃபீல்ட்ல
டெலிவரி
பாய்
வேலை..
தனுஷை
பங்கமாக
கலாய்க்கும்
நெட்டிசன்கள்!

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்
3டி தொழில்நுட்பத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘கோச்சடையான்' படம், கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்த போதும், மேக்கிங்கில் சொதப்பியதால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

கோச்சடையான் தயாரிப்பில் சிக்கல்
'கோச்சடையான்' படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் முரளி என்பவர் தயாரித்திருந்தார். இவர் 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், முரளி தாக்கல் செய்திருந்த ஆவணங்களுக்கு, ரஜினியின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்து போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி கடனாகப் பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

லதா ரஜினிகாந்த் மீது வழக்கு
இதனால், கடந்த 2015-ம் ஆண்டு லதா ரஜினிகாந்த் மீது, அபிர்சந்த் நஹார் முரளி, பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது, ஆதாரங்களைத் திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
Recommended Video

லதா ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு
இதனையடுத்து, தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ‘‘குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறியது. எனவே அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அதேநேரம் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463, அதாவது ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவின் கிழ் மட்டும் விசாரணை நடத்தலாம்' 'என உத்தரவிட்டுள்ளது.