twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அகமதாபாத்தில் மோடிக்காக ‘கோச்சடையான்’ சிறப்புக்காட்சி ஏற்பாடு?

    |

    அகமதாபாத்: சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள 'கோச்சடையான்' படத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு மட்டும் ஸ்பெஷலாக போட்டுக் காட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்த மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை எனச் சொல்லப் பட்டாலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து கோவையில், மோடியைச் சந்தித்தார் நடிகர் விஜய். அதுவும் வழக்கம் போல் அரசியல் ரீதியான சந்திப்பில்லை என்றே சொல்லப் பட்டது.

    இந்நிலையில் தற்போது ரஜினியின் கோச்சடையான் படத்தை மோடிக்கு தனியாக போட்டுக் காண்பிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

    விருப்பம்....

    விருப்பம்....

    சென்னையில் ரஜினியைச் சந்தித்த மோடி அவரது கோச்சடையான் அனிமேஷன் படத்தைப் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.

    சிறப்புக்காட்சி...

    சிறப்புக்காட்சி...

    அதையடுத்து, அகமதாபாத்தில் மோடிக்கு படத்தைப் போட்டுக் காண்பிக்க அப்படத்தின் இயக்குநரும், ரஜினியின் இளைய மகளுமான சவுந்தர்யா, சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.

    பட இயக்குநர்...

    பட இயக்குநர்...

    மோடியுடன் அமர்ந்து படத்தை சவுந்தர்யா பார்க்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மறுப்பு...

    மறுப்பு...

    ஆனால், இத்தகவல் உண்மையானதல்ல என அப்படத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

    English summary
    Media have been abuzz with news about BJP prime ministerial candidate Narendra Modi's meeting with Kollywood superstar Rajinikanth and Ilayathalapathy Vijay for the last few days. Now the latest development according to reports is that Modi is likely to watch Rajinikanth's Kochadaiiyaan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X