»   »  'நல்ல படம் எடுத்தாலும் தியேட்டர் கிடைக்க மாட்டேங்குதே!'- கோடை மழை இயக்குநரின் வருத்தம்

'நல்ல படம் எடுத்தாலும் தியேட்டர் கிடைக்க மாட்டேங்குதே!'- கோடை மழை இயக்குநரின் வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல படம் எடுக்கலன்னு பல பேர் வருத்தப்படறாங்க. ஆனா உண்மையிலேயே நல்ல படம் எடுத்தா யார் சார் தியேட்டர் தராங்க? என்று வருத்தமும் கோபமும் பொங்க கேட்கிறார் கதிரவன்.

சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுவரும் கோடை மழை படத்தின் இயக்குநர் இவர்.

Kodai Mazhai director Kathiravan's open talk

நடிகை ப்ரியங்கா - புதுமுகம் கண்ணன் நடித்திருந்த இந்தப் படம் நெல்லைச் சீமையின் சங்கரன்கோவில் பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இயக்குநரின் சொந்த ஊர் சங்கரன்கோவில்தான்.

'அப்படியே எண்பதுகளில் பாரதிராஜா படம் பார்த்த உணர்வு' என படம் பார்த்த பலரும் பாராட்டி வருவது இந்தப் படத்தின் வெற்றி.

படத்தை எடுத்துவிட்டாலும், அத்தனை சுலபத்தில் வெளியிட முடியவில்லையாம். அந்த வருத்தத்தை நம்மிடம் இப்படிப் பகிர்ந்து கொண்டார் கதிரவன்:

"நல்ல படம் வருவதில்லையே என்று பலரும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆனால் நல்ல படம் எடுத்தா மட்டும் ஓடிவிடுகிறதா... ஆனால் குப்பையான படமாக இருந்தாலும் வெளியிடுகிற பேனரை வச்சித்தான் தியேட்டரே தராங்க. இங்கே தியேட்டர்களை மொத்தமாக சில நிறுவனங்கள் மடக்கி வச்சிருக்காங்க. அவங்களை மீறி தியேட்டர்களில் என்னைப் போன்றவர்களின் படங்களை வெளியிட முடிவதில்லை.

Kodai Mazhai director Kathiravan's open talk

படங்களை வெளியிட்டுத் தருகிறோம் என்ற பெயரில் பெரும் பணம் கேட்கிறார்கள் வெளியீட்டு நிறுவனங்கள். சொல்லப்போனால் தங்கள் நிறுவன பேனர்களை வாடகைக்கு விடுகிறார்கள். இவர்களின் பிடியில் இருக்கும்வரை தமிழ் சினிமா வியாபாரம் இப்படித்தான் இருக்கும்.

கோடை மழை படத்தை ஏழு மாதங்களுக்கு முன்பே முடித்துவிட்டேன். பல நிறுவனங்களிடம், தியேட்டர்காரர்களிடம் போராடிப் பார்த்தேன். ஆனால் ரிலீஸ் பண்ண முடியவில்லை. கடைசியில் சொந்தப் பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்துதான் ரிலீஸ் செய்தேன். ஆனால் சரியான காட்சி நேரம் தரவில்லை. சில தியேட்டர்கள் ஓரிரு நாட்கள் கூட பொறுமையாக இல்லாமல் படத்தைத் தூக்கிவிட்டனர். அப்புறம் எப்படி படங்கள் ஓடும்?

ஒரு கண்ணியமான, மண் சார்ந்த அர்த்தமுள்ள பொழுதுபோக்குப் படம் தந்திருக்கோம். ஆனா இவ்வளவு உழைப்பையும் இதே சினிமா உலகம்தான் கேலிக்கூத்தாக்குது.. நாங்க என்ன செய்யறது?" என்றார் ஆவேசமாக.

மூச்சுக்கு முன்னூறு தடவை சிறுபடத் தயாரிப்பாளர்கள் நலன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற சங்கங்கள் என்னதான் செய்கின்றன?

English summary
Debutant Director Kathiravan has disappointed over the present releasing system in Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil