»   »  தீபாவளி ஸ்பெஷல்.... கொடி எப்படி இருக்கு?

தீபாவளி ஸ்பெஷல்.... கொடி எப்படி இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து மூன்று தோல்விகளால் நெருக்கடியில் இருந்த தனுஷ், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் ரிலீஸ் செய்திருக்கும் படம் கொடி.

இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஊர் ஊராக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் தனுஷ்.


Kodi.. fans reaction

படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கே ஆரம்பித்துவிட்டது. முதல் காட்சி முடிந்த கையோடு ரசிகர்களின் ரியாக்ஷன்களும் வந்துவிட்டன.


என்ன சொல்கிறார்கள் கொடி படம் பற்றி...?


'கொடி படம் சரியான நேரத்தில் பட்டாசாக வந்திருக்கிறது. தனுஷும் த்ரிஷாவும் கலக்கி இருக்கிறார்கள்' - இதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.


இடைவேளை வரை படம் வித்தியாசமாகச் செல்வதாகவும், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பாணியில் இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


த்ரிஷாவின் வேடம் மிகவும் சவாலானது... ஆனால் அதை அவர் பிரமாதமாகக் கையாண்டுள்ளார் என்று பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர் த்ரிஷாவைக் கடுமையாகக் குறை கூறியும் உள்ளனர். நல்ல வேடம்... அவரால் சிறப்பாக செய்ய முடியவில்லை, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


அரசியல்வாதி கெட்டப்பில் தனுஷ் அசால்டாக கலக்கியுள்ளார். ஆள் ஒல்லி என்றாலும், கெட்டப்பில் கில்லி என்று வெகுவாகப் புகழ்ந்துள்ளனர் பெரும்பாலான ரசிகர்கள்.


ஆக, தனுஷுக்கு இது ஒரு பெரிய ஆறுதலைத் தந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் முதல் தகவல் தந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமைதான் உண்மையான நிலவரம் தெரியவரும்.

English summary
Here is the fans and film lovers reaction for Dhanush's Kodi movie that released Today morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil