Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கோடியில் ஒருவன் 25வது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
சென்னை : மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
விஜய் ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்க ஆத்மிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டே... அம்மணிக்கு இப்ப என்ன வயசு தெரியுமா?
அதிரடியான அரசியல் ஆக்சன் திரைப்படமாக வெளியான கோடியில் ஒருவன் இப்பொழுது 25வது நாளை வெற்றிகரமாக கடந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக
நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் என்றாலே படம் வித்தியாசமாகவும் அதேசமயம் நன்றாகத்தான் இருக்கும் என்ற மினிமம் கேரன்டியுடன் வலம் வரும் சூழலில் முதல் முறையாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் கோடியில் ஒருவன். மெட்ரோ படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த ஆனந்த கிருஷ்ணன் அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக கோடியில் ஒருவன் படத்தை இயக்கியிருந்தார்.

விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டர்
முழுக்க முழுக்க சென்னையில் முடிக்கப்பட்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டராக நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. 2021ல் வெளியான திரைப்படங்களிலேயே கோடியில் ஒருவன் அதிக வசூலை வசூலித்ததாக கூறப்பட்டது.

ஆரவாரமில்லாத நடிப்பு
ஆக்ஷன், அரசியல், காதல்,காமெடி, திரில்லர் என அனைத்து அம்சங்களும் கொண்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட இப்பொழுது வெற்றிகரமாக இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. விஜய் ஆண்டனியின் ஆரவாரமில்லாத நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருக்க ஆனந்த கிருஷ்ணன் இப்படத்திற்கு வேறு விதமாக திரைக்கதையை அமைத்து மிரட்டி இருந்தார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

25-ஆவது நாள் கொண்டாட்டம்
அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட கோடியில் ஒருவன் இப்பொழுது 25-ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டி செலிபிரேட் செய்துள்ளது. விஜய் ஆண்டனி, அனந்தகிருஷ்ணன், தனஞ்ஜெயன் என பலரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கோடியில் ஒருவன் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. கோடியில் ஒருவன் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி ஆனந்தகிருஷ்ணன் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.