யுவன் கொடுத்த மெலடி ட்ரீட்: காஃபி வித் காதல் படத்தில் இருந்து மனதை வருடும் நாளைய பொழுது பாடல் ரிலீஸ்
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது.
Recommended Video
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்போது 'காஃபி வித் காதல்' படத்தில் இருந்து யுவனின் இசையில் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

காமெடியில் களமிறங்கிய சுந்தர் சி
தமிழ் சினிமாவில் தரமான காமெடி திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வின்னர், கிரி, கலகலப்பு என சுந்தர் சி இயக்கிய காமெடி ப்ளாக் பஸ்டர் படங்களின் லிஸ்ட் நீளமானது. இடையில் ஹாரர் திரில்லர் பின்னணியில், அரண்மனை படத்தை மூன்று பாகங்களாக இயக்கியிருந்தார். இந்நிலையில், 'காஃபி வித் காதல்' படம் மூலம் மீண்டும் காமெடிக்கு திரும்பியுள்ளார்.

ஊட்டியில் காஃபி வித் காதல்
காமெடி ஜானரில் உருவாகும் 'காஃபி வித் காதல்' திரைப்படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா. சம்யுக்தா, அம்ரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி இன் ஃபேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்டான ஊட்டியில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடியாக உருவாகி வரும் 'காஃபி வித் காதல்', ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவனுடன் மீண்டும் கூட்டணி
ரொம்பவே ஃப்ரஷான படமாக உருவாகும் 'காஃபி வித் காதல்' படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். சில வருட இடைவேளைக்குப் பிறகு சுந்தர் சி - யுவன் கூட்டணி அமைத்துள்ளதும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல் யுவன் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இருந்து 'ரம்பம்பம் ஆரம்பம்' என்ற பாடலை ரீமேக் செய்துள்ள யுவன், 'தியாகி பாய்ஸ்' என்ற பாடலையும் தரமாக கொடுத்துள்ளார்.

மெலடியாக மூன்றாவது சிங்கிள்
இந்நிலையில், 'காஃபி வித் காதல்' படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'நாளையப் பொழுது' எனத் தொடங்கும் இப்பாடலை பா விஜய் எழுதியுள்ளார். மனதை வருடும் மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு யுவன் குரல் கொடுத்துள்ளார். 'நாளையப் பொழுது' பாடலை யுவனின் குரலில் கேட்ட ரசிகர்கள், உருக்கமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். யுவன் கம்பேக் எனவும்,, யுவன் தான் எப்போதும் எங்கள் போதை என்றும் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











