»   »  5 நாட்கள் லீவ்: அனுஷ்காவுடன் கமுக்கமாக லண்டனுக்கு பறந்த கோஹ்லி

5 நாட்கள் லீவ்: அனுஷ்காவுடன் கமுக்கமாக லண்டனுக்கு பறந்த கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு 5 நாட்கள் விடுப்பு கிடைத்ததும் காதலி அனுஷ்காவுடன் லண்டனுக்கு சென்றுவிட்டார்.

பாலிவுட்டில் வெற்றி மேல் வெற்றி கொடுத்து வருபவர் தீபிகா படுகோனே. இந்நிலையில் தற்போது பாலிவுட் கொண்டாடும் வெற்றி நாயகியாகியுள்ளார் அனுஷ்கா. காரணம் அவர் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த சுல்தான் படம் ரூ.500 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

சுல்தானின் வசூல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

கரண் ஜோஹர் படம்

கரண் ஜோஹர் படம்

சுல்தானை அடுத்து அனுஷ்கா கரண் ஜோஹர் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லண்டன்

லண்டன்

கோஹ்லிக்கு 5 நாட்கள் விடுப்பு கிடைத்தது. அனுஷ்காவும் கரணின் படத்தில் நடித்து முடித்து ஃப்ரீயாக இருந்தார். இதையடுத்து கோஹ்லியும், அனுஷ்காவும் லண்டனுக்கு கிளம்பிவிட்டனர்.

கோஹ்லி

கோஹ்லி

லண்டனில் கோஹ்லியும், அனுஷ்காவும் ஒரே நிறத்திலான உடை அணிந்து கடை, கடையாக ஏறி இறங்கி ஷாப்பிங் செய்துள்ளனர். அவர்கள் ஷாப்பிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

காதல்

காதல்

கோஹ்லியும், அனுஷ்காவும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கோஹ்லியின் அதீத முயற்சியால் அவர்கள் மீண்டும் சேர்ந்துள்ளனர். காதலை புதுப்பித்தாலும் அது குறித்து பேசாமல் அமைதி காத்து வருகிறார்கள்.

English summary
Cricketer Virat Kohli and his lady love Anushka Sharma spotted relaxing in London.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil