Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஃபீல்டுக்கு வெளியே கோஹ்லி வேற மாதிரி: அனுஷ்கா சொன்ன ரகசியம்
மும்பை: கணவர் விராட் கோஹ்லி பற்றி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ள விஷயத்தை ரசிகர்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அனுஷ்கா புதுப்படங்களை ஒப்புக் கொள்வதில் அவசரம் காட்டவில்லை.
அவர் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்த ஜீரோ படம் ஓடவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அனுஷ்கா தனது கெரியர் மற்றும் கணவர் பற்றி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

கோஹ்லி
விராட் கோஹ்லி கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்று நிஜத்தில் இருக்க மாட்டார். நான் பார்த்த சாந்தமான மனிதர்களில் அவரும் ஒருவர். நிஜத்தில் அவர் ரொம்ப கூலானாவர். நம்பிக்கை இல்லை என்றால் என் நண்பர்கள், என் குழுவினரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் ரொம்ப பேஷனேட்டாக இருப்பதால் மைதானத்தில் அப்படி உள்ளார்.

சாந்தம்
நிஜ வாழ்க்கையில் விராட் கோஹ்லி ஆக்ரோஷமானவர் இல்லை. அவரை பார்த்தாலே வாவ், மனிதர் இந்த அளவுக்கு சாந்தமாக இருக்கிறாரே என்று தான் நினைக்கத் தோன்றும். நாங்கள் எங்களின் துறைகளில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சேர்ந்து இருப்போம். விமான நிலையங்களில் ஒருவரையொருவர் ரிசீவ் செய்வோம்.

மரியாதை
வேலையை விட்டுவிட்டு என்னுடன் அதிகம் நேரம் செலவிடுங்கள் என்று நான் ஒருபோதும் விராட்டிடம் சொல்ல மாட்டேன். அவரும் அப்படித் தான். நான் அவரின் வேலையை மதிக்கிறேன், அவர் என் வேலையை மதிக்கிறார். அதனால் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டுக்கு இடமே இல்லை, மரியாதை தான் உள்ளது.

தோனி
நான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இது குறித்து நான் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா. கோஹ்லி ரொம்ப கூலானவர் என்று அனுஷ்கா கூறியதை நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை. அனுஷ்கா பேசியதை பார்த்தால் அவர் கோஹ்லி அல்ல தோனியை பற்றி பேசியது போன்று உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.