»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட் என்று அழைக்கப்படும் கோடம்பாக்கம் தான் ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக படங்களை தயாரித்துஅள்ளித் தந்து கொண்டிருந்தது.

ஆனால் இப்போது கோலிவுட் தடுமாறிக் கொண்டிருக்கிறது. டப்பிங் படங்கள் தான் எண்ணிக்கையில் விஞ்சிநிற்கின்றன.

இந்த ஆண்டு இதுவரை 95 படங்கள் தான் எடுக்கப் பட்டுள்ளன. இவற்றில் 56 படங்கள் பிறமொழிப் படங்கள்.நேரடித் தமிழ்ப் படங்கள் வெறும் 39 தான்.

நிலமை இப்படியே போனால் "தெலுங்கு ஸ்டைலில்", யாருடா டப்பிங் ரைட்ஸ் தருவான்னு அலைய வேண்டியதுதான் என்கிறார் வினியோகஸ்தர் ஒருவர்.

திருட்டு வி.சி.டி., கேபிள் டிவிக்கள் பாதிப்பால் தயாரிப்பாளர்கள் யாருமே பணம் போட முன்வர மறுப்பதால் தான்இந்த நிலை. வேற்று மொழி படத்தை வாங்கி சில லட்சம் செலவில் வாய்ஸ் டப்பிங் மட்டும் செய்து படங்களைவெளியிட்டு வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil