»   »  வறுமையில் வாடும் கொல்லங்குடி கருப்பாயி... 'மலேசியா ரிட்டர்ன்' நடிகர் சங்கம் கவனிக்குமா?

வறுமையில் வாடும் கொல்லங்குடி கருப்பாயி... 'மலேசியா ரிட்டர்ன்' நடிகர் சங்கம் கவனிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாண்டியராஜன் இயக்கிய 'ஆண்பாவம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி.

'ஆண்பாவம்' படத்திற்குப் பிறகு 'ஆண்களை நம்பாதே', 'கபடி கபடி', 'கோபாலா கோபாலா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வறுமையில் வாடும் கொல்லங்குடி கருப்பாயி, உயிர் பயத்துடன் வாழ்ந்து வருவதாக நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆண்பாவம் அறிமுகம்

ஆண்பாவம் அறிமுகம்

'ஆண்பாவம்' படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. 'ஆண்பாவம்' படத்திற்குப் பிறகு பாண்டியராஜன் இயக்கிய சில படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

கொல்லங்குடி கருப்பாயி

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்த கருப்பாயி சினிமாவிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். சினிமா மூலம் இவரது நாட்டுப்புற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவத் தொடங்கியது. தற்போது சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கௌரவம்

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கௌரவம்

சென்னை லயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மையம், மாற்று ஊடக மையம், ஓ.என்.ஜி.ஜி.சி ஆகியவை இணைந்து நாட்டுப்புறக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த கொல்லங்குடி கருப்பாயி நிருபர்களிடம் பேசினார்.

வருமானம் போதவில்லை

வருமானம் போதவில்லை

"கொஞ்சம் படங்களில்தான் நடித்திருக்கிறேன். சினிமாவில் கொஞ்சமாகத்தான் பாடியிருக்கிறேன். ஆனால் நாட்டுப்புறப் பாடல்களை மேடை தோறும் பாடிவந்தேன். சினிமாவால் நல்ல புகழ் கிடைத்தது. ஆனால் சினிமாவில் கிடைத்த வருமானம் போதவில்லை.

விஷால் உதவியால்

விஷால் உதவியால்

அன்றாட செலவுகளுக்கு மட்டுமே சினிமா வருமானம் பயன்பட்டது. சினிமாவில் நடிக்காததால் இப்போது அதுவும் இல்லை. தம்பி விஷால் ஏற்பாட்டில் நடிகர் சங்கம் மாதம் 4,00 உதவித் தொகை வழங்கி வருகிறது. அதை வைத்து வாழ்ந்து வருகிறேன். அந்த பணம் அவருக்கு போதுமானதாக இல்லை.

உயிர் பயத்தோடு

உயிர் பயத்தோடு

நான் குடியிருக்கும் வீடு எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில் இருக்கிறது. அதனால் உயிர் பயத்துடனும், மிகுந்த அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறேன். எனது தூரத்து சொந்தத்திலிருந்து ஒரு பேத்தி என்னைப் பராமரித்து வருகிறார்.

நடிகர் சங்கம் கவனிக்குமா

நடிகர் சங்கம் கவனிக்குமா

எல்லோரும் சினிமாக்காரர்களிடம் உதவி கேட்கச் சொல்கிறார்கள். நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை. இனிமேல் கேட்கவும் மாட்டேன்" என்றார் கொல்லங்குடி கருப்பாயி. இவரின் நிலைமையை கண்ட நடிகர் சங்கம் ஏதாவது உதவி செய்யுமா?

4000 போதுமா

4000 போதுமா

வாழ்வாதாரம் இன்றித் தவித்தவருக்கு 4000 உதவித் தொகை வழங்க வழிவகை செய்துள்ளார் விஷால். ஆனால், இன்றைய காலத்தில் 4000 வயதான பெண்ணின் அன்றாடச் செலவிற்கும், மருத்துவச் செலவிற்கும் எப்படி போதுமானதாக இருக்கும்?

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா?

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா?

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் என நடத்திவரும் நடிகர் சங்கத்தினர், ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க ஹெலிகாப்டரில் வரவழைக்கிறார்கள். ஆனால், சினிமாவில் நடித்த இவரைப் போன்றவர்களைப் முழுவதுமாகப் புறக்கணிப்பது நியாயமா?

English summary
Kollangudi Karuppaayi acted in the films like 'Aan paavam', 'Kabadi kabadi' directed by Pandiarajan. She has told reporters that, she is now living in poverty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X