»   »  அப்பா - மகள் பாசம் Vs அப்பா - மகன் பாசம்!

அப்பா - மகள் பாசம் Vs அப்பா - மகன் பாசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை தங்க மீன்கள் மற்றும் பொன் மாலைப் பொழுது ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன.

இந்த இரு படங்களுக்கும் உள்ள ஒரு சுவாரஸ்ய ஒற்றுமை, இரண்டுமே தந்தையின் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளவை.

தங்க மீன்கள்

தங்க மீன்கள்

கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்க மீன்கள் படத்தை சக இயக்குநர்கள், இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். தந்தைக்கும் மகளுக்குமான பாசம்தான் இந்தப் படம். அதுமட்டுமல்ல, குழந்தைகள் உலகை உணரத் தவறிய கல்வி முறையையும் இந்தப் படம் சாடுகிறதாம்.

பொன்மாலைப் பொழுது

பொன்மாலைப் பொழுது

இதுவும் தந்தை பாசத்தைச் சொல்லும் படம்தானாம். ஆனால் இதில் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பை மனதை நெகிழ்த்தும் வகையில் சொல்லியிருக்கிறார்களாம்.

தியேட்டர்கள் அறிவிப்பு

தியேட்டர்கள் அறிவிப்பு

தங்க மீன்களுக்கும் பொன்மாலைப் பொழுதுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது இரண்டு படங்களுக்குமே தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காததால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒரு மாத காலம் வெளியிட முடியாத நிலை. ஒருவழியாக இரண்டு படங்களுக்குமே ஓரளவு அரங்குகள் கிடைத்துவிட்டன.

சும்மா நச்சுனு இருக்கு

சும்மா நச்சுனு இருக்கு

இந்த இரு படங்களைத் தவிர, சும்மா நச்சுன்னு இருக்கு என்ற காமெடிப் படமும் இந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள இன்னுமொரு படம் இது.

English summary
There is going to be a clash of emotions on August 30. Two Tamil films based on emotions – Thanga Meengal and Ponmaalai Pozhudhu are scheduled to release.
Please Wait while comments are loading...