குஸ்தி போட ரெடியாகும் விஷ்ணு விஷால்..“கட்டா குஸ்தி“புது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
முன்னணி நடிகரான விஷ்ணு விஷாலுக்கு வெண்ணிலா கபடி குழு வெற்றிப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் என நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல நடிகர் என்ற இடத்தை பிடித்தார் விஷ்ணு விஷால்.

விஸ்ணு விஷால்
விஸ்ணு விஷால் நடிப்பில், சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இப்படத்தில் அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருந்தார் விஷ்ணு விஷால். ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மோகன்தாஸ்
எஃப்.ஐ.ஆர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், மோகன்தாஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை களவு பட இயக்குநர் முரளி கார்த்திக் இயக்குகிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

கட்டா குஸ்தி
மோகன்தாஸ் படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால், அடுத்ததாக கட்டா குஸ்தி என்ற படத்தில் நடித்திருக்கிறார். செல்லா அய்யாவு என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும், விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரிக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒப்பந்தமாகி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மேலும், நடிகர் விஷ்ணு விஷால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


Click it and Unblock the Notifications











