»   »  ரஜினி எங்கு ஓட்டுப் போடுவார்னு தெரியும்.... சினேகா எங்கன்னு தெரியுமா?

ரஜினி எங்கு ஓட்டுப் போடுவார்னு தெரியும்.... சினேகா எங்கன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலில் திரை நட்சத்திரங்களுக்கு தனிவரிசை கிடையாது என்ற தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் கறாரால், திரை நட்சத்திரங்கள் வழக்கம் போல வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டியதுதான்.

நாளை தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மக்கள் வாக்களிக்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில் மக்களில ஒரு அங்கமான திரைத் துறையினரும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.

அஜீத் - விஜய்

அஜீத் - விஜய்

நடிகர் அஜீத் நாளை காலை 7 மணிக்கு திருவான்மியூரில் தனது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஓட்டுப் போடவிருக்கிறார். இதேபோல நடிகர் விஜய் அடையாறு தனலட்சுமி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப் போடவிருக்கிறார்.

டி.ஆர்- சிம்பு

டி.ஆர்- சிம்பு

நடிகர் சிவகுமார், கார்த்தி, ஜீவா, டி.ராஜேந்தர், சிம்பு ஆகியோர் தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் வாக்களிக்க உள்ளனர். தியாகராஜன், பிரஷாந்த், சினேகா, பிரசன்னா ஆகியோர் தி.நகரில் உள்ள அரசு பள்ளியில் வாக்களிக்க உள்ளனர்.

விஷால் - சிவகார்த்திகேயன்

விஷால் - சிவகார்த்திகேயன்

நடிகர் விஷால் அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மை பள்ளியில் காலை 10 மணிக்கு தனது வாக்கினைப்பதிவு செய்யவிருக்கிறார். சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் தனியார் பள்ளியிலும், சந்தானம் பல்லாவரத்திலும் வாக்களிக்கின்றனர். இயக்குநர் மோகன்ராஜா கோடம்பாக்கத்திலும், ஜெயம் ரவி ஆழ்வார்பேட்டையிலும் வாக்களிக்கவிருக்கின்றனர்.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானலிலும், பரத் சாலிகிராமத்திலும், பாக்யராஜ் அவரது குடும்பத்துடன் நுங்கம்பாக்கம் லேக்வியூ பகுதியிலும் வாக்களிக்கின்றனர்.
நடிகர், நடிகைகளுக்கு வாக்களிக்கத் தனிவரிசை கிடையாது என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறிவிட்டது நினைவிருக்கலாம்.

English summary
Kollywood Celebrities Election Booth Details Listed Here.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil