Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதல் முறையா அழ வச்சிட்டாரு.. நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம்.. கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்
சென்னை: தனது நகைச்சுவை திறனால், தமிழக மக்களை இதுவரை சிரிக்க வைத்து வந்த சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜி காலமான செய்தி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு மாதிரியே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர் வடிவேலு பாலாஜி.
உடல் நலக் குறைவால் திடீரென அவரது உயிர் பிரிந்த செய்தி கேட்ட பல சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

லாக்டவுன் தந்த சோகம்
நலிந்த சினிமா கலைஞர்களை இந்த லாக்டவுன் படுத்திய பாடு என்ன என்பது இவரது மரணம் நமக்கு உணர்த்தும் பாடம். பணம் படைத்த பிரபலங்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகும் நிலையில், 45 வயதில் சிகிச்சைக்கு கூட பணம் செலுத்த முடியாமல் வடிவேலு பாலாஜி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் இரங்கல்
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நகைச்சுவை நடிகர் வடிவேல் ��ாலாஜி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ந்து போய், அவருக்காக இரங்கல் தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிப் போன எமோஜிகளை அவர் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களும் வடிவேல் பாலாஜி ஆன்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நம்ப முடியல
பிரபல இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா, தனது ட்விட்டர் பக்கத்தில் சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜி உயிரிழந்த செய்தியை ஷேர் செய்து, நம்ப முடியல.. ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார். மனோபாலாவின் பதிவை பார்த்து விட்டு ஏகப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என்ன வருஷமடா இது
விஜய் டிவியில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில், நடிகர் வடிவேலு பாலாஜி சிரிச்சா போச்சு ரவுண்டில் வந்து பிரபலங்களை கலங்கடித்து செல்வார். அந்த நிகழ்ச்சியை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்குநராக அறிமுகமான கோலமாவு கோகிலா படத்தில் வடிவேல் பாலாஜியை நடிக்க வைத்திருந்தார். அடுத்ததாக வடிவேலு பாலாஜி நடித்து வரும் பெண் விலை வெறும் 999 படத்தின் போஸ்டரை ஷேர் செய்து என்ன வருஷமடா இது என அவரது ரசிகர்கள் சோகக் கடலில் மூழ்கி உள்ளனர்.

வேதனையா இருக்கு
சூது கவ்வும், காக்க முட்டை, ஆரஞ்சு மிட்டாய், டிக் டிக் டிக் என ஏகப்பட்ட படங்களில் காமெடியனாக நடித்து கலக்கி வரும் நடிகர் ரமேஷ் திலக், மற்றொரு காமெடி நடிகரான வடிவேலு பாலாஜி உயிரிழந்த செய்தி அறிந்து, " ரொம்ப வருத்தமாவும் வேதனையாவும் இருக்கு, போய்ட்டு வாங்க" என ட்வீட் போட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்லோரையும் சிரிக்க வைத்தவர்
எல்லோரையும் ஏகப்பட்ட தருணங்களில் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு பாலாஜி, சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு காரணமாக திடீரென அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் சாந்தனு, நொறுங்கிய இதய எமோஜியுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராட்சசன் இயக்குநர்
விஜய் டிவியில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் வடிவேலு பாலாஜி, கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் அவர் உயிரிழந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.