»   »  2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா, நமீதா, ரியா, ஹிப்ஹாப் தமிழா...

2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா, நமீதா, ரியா, ஹிப்ஹாப் தமிழா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

2017ம் ஆண்டு இப்போது தான் துவங்கியது போன்று இருந்தது ஆனால் அதற்குள் நிறைவடையப் போகிறது. 2018ம் ஆண்டை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டவர்களின் விபரம்,

நாக சைதன்யா

நாக சைதன்யா

நடிகை சமந்தா தனது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் மாதம் கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.

வீரேந்திர சவுத்ரி

வீரேந்திர சவுத்ரி

நடிகை நமீதாவுக்கும், அவரது காதலரான நடிகர் வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு சில பிரபலங்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திடீர் என்று நவம்பர் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகு தான் பலருக்கும் தெரிய வந்தது.

நடிகை

நடிகை

மெர்சல் படத்தில் ஆட்டோக்காரராக வந்த காளி வெங்கட்டுக்கும், ஜனனிக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. இது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்.

காதலர்

காதலர்

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயின் ஆன ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். திடீர் என்று இந்த திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தீக்ஷிதா

தீக்ஷிதா

பாரிஜாதம் படம் மூலம் இசையமைப்பாளரான தரண் குமார் சென்னையை சேர்ந்த நடிகை தீக்ஷிதாவை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

வினோதினி

வினோதினி

நடிகரும், கவிஞர் கண்ணதாசனின் பேரனுமான ஆதவுக்கும், வினோதினிக்கும் டிசம்பர் மாதம் 6ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

English summary
Here is the list of Kollywood celebrities who have got married in the year 2017. Few weddings were conducted in a grand manner while few were held in a simple ceremony.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X