»   »  வட போச்சே, மாஸ்ட்ர் ஸ்ட்ரோக், ஹாட்ஸ் ஆப்: மோடியை புகழ்ந்து தள்ளிய கோலிவுட்

வட போச்சே, மாஸ்ட்ர் ஸ்ட்ரோக், ஹாட்ஸ் ஆப்: மோடியை புகழ்ந்து தள்ளிய கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று திடீர் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியை கோலிவுட் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவோடு ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ரஜினிகாந்த்

ஹாட்ஸ் ஆப் நரேந்திர மோடிஜி. புதிய இந்தியா பிறந்துள்ளது, ஜெய்ஹிந்த் என ரஜினிகாந்த் ட்வீட்டியுள்ளார்.

தனுஷ்

அருமையான நடவடிக்கை மோடிஜி. வரலாற்று சிறப்புமிக்கது. மரியாதை, ஜெய் ஹிந்த், ஸ்வச்பாரத்!! பெருமையான இந்தியன் என தனுஷ் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்

டியர் மிஸ்டர் நரேந்திர மோடி. நீங்கள் ஒரு ஜாம்பவான் சார். தேசபக்தி உள்ள அனைத்து இந்தியனும் இன்று இரவு நன்றாக தூங்குவார்கள். இந்த நாளுக்காக நன்றி சார். சுத்தமான இந்தியா, ஜெய்ஹிந்த்.

குஷ்பு

இந்த நடவடிக்கையை 4 மாதங்களாக ரகசியமாக வைத்திருந்ததற்காக பிரதமரை பாராட்டுகிறேன். கறுப்பு பணம் நாளையில் இருந்து வெத்து காகிதம் என்பதை அறிந்து பலர் கோமாவுக்கு சென்றுவிட்டனர்.

ஐஸ்வர்யா தனுஷ்

வரலாற்று சிறப்புமிக்க செயல் நரேந்திர மோடிஜி..ஊழலுக்கு எதிரான போர், ஜெய்ஹிந்த்.

விஜய் ஆண்டனி

நன்றி நரேந்திர மோடி சார்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

வட போச்சே...
கறுப்பு பணம் போச்சே!!!!
சூப்பர்

விஷால்

மோடிஜி. மாஸ்டர்ஸ்ட்ரோக். புதிய இந்தியாவை கொண்டு வாருங்கள். இதை ஏற்றுக் கொள்ள நேரம் எடுக்கும். புரட்சி. கடவுள் ஆசிர்வதிப்பாராக.

English summary
Kollywood celebs could not stop appreciating PM Narendra Modi for his master stroke to put an end to black money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil