»   »  காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக திரையுலகினர் மவுன போராட்டம்: முதல் ஆளாக வந்த விஜய்

காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக திரையுலகினர் மவுன போராட்டம்: முதல் ஆளாக வந்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தத்தால் புதுப்படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை, படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தமிழக மக்களின் நலன் கருதி திரையுலகினர் ஒன்று சேர்ந்தனர்.

Kollywood celebs protest over Cauvery, Sterlite issues

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவக்குமார், ராஜேஷ், விவேக், பார்த்திபன், பிரேம், பொன்வண்ணன், நடிகைகள் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த இந்த போராட்டத்தில் விஜய் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திரையுலகினரின் மவுன போராட்டம் என்று போராட்ட மேடையில் பேசிய நாசர் தெரிவித்தார்.

English summary
Celebrities of Tamil film industry have gathered to protest in a silent way insisting the centre to set up Cauvery Management board and to ban Sterlite copper plant forever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X