»   »  சிவா மாதிரியே மேடையில் அழுத சரத், டி.ஆர்., ஜெயம் ரவி, பூர்ணா

சிவா மாதிரியே மேடையில் அழுத சரத், டி.ஆர்., ஜெயம் ரவி, பூர்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல பல கோலிவுட் பிரபலங்கள் பிறர் முன்பு அழுதுள்ளனர்.

ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். அவர் அழுததும், அழுதார் கோலிவுட்டில் அது தான் ஹாட் டாப்பிக்.

இந்நிலையில் மக்கள் முன்பு கோலிவுட் பிரபலங்கள் யார், யார் எல்லாம் அழுதார்கள் என்று பார்க்கலாம்.

சிவா

சிவா

ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி அழுதார். தன்னை நிம்மதியாக வேலை செய்ய விடுமாறு கேட்டுக் கொண்டார்.

பூர்ணா

பூர்ணா

சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை பூர்ணா மகிழ்ச்சியில் அழுதார். வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவுக்கு குட்பை சொல்ல முடிவு எடுத்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை நினைத்து அவர் அழுதார்.

சரத்குமார்

சரத்குமார்

2015ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமார் பிரஸ் மீட்டில் அழுதார். நடிகர் சங்க தலைவராக தான் இருந்தபோது செய்த நல்ல விஷயங்கள் பற்றி விளக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

டி. ராஜேந்தர்

டி. ராஜேந்தர்

சிம்புவின் வாலு படம் தொடர்ந்து தள்ளிப்போனது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது டி. ராஜேந்தர் கண் கலங்கினார். நான் பல கோடி சம்பாதித்தாலும் என் செல்வம் என் மகன் சிம்பு என்று கூறினார்.

மோகன் ராஜா, ஜெயம் ரவி

மோகன் ராஜா, ஜெயம் ரவி

தனி ஒருவன் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ஜெயம் ராஜா தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றியது பற்றி கூறியபோது கண் கலங்கினார். எனக்கு ஜெயத்தை கொடுத்தவர் என் தந்தை மோகன். அவர் பெயரை என் பெயருடன் சேர்ப்பதில் மகிழ்ச்சி என்றார். அவரை பார்த்து அவரது தம்பி ஜெயம் ரவியும் அழுதார்.

English summary
Not only Sivakarthikeyan, Kollywood celebs Sarath Kumar, Poorna, T. Rajendhar, Mohan Raja, Jayam Ravi have also got emotional in public.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil