»   »  அய்யோ... இந்த பிஞ்சுக்கா இந்த கதி? - கோலிவுட் பிரபலங்கள் கண்ணீர்

அய்யோ... இந்த பிஞ்சுக்கா இந்த கதி? - கோலிவுட் பிரபலங்கள் கண்ணீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிறுமி ஆசிபா பலாத்காரம், கமல், பிரகாஷ் ராஜ் குமுறல் #JusticeforAsifa

காஷ்மீரில் கத்துவா கிராமத்தில் எட்டுவயது நாடோடி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் வார்த்தைகளில் எழுத முடியாதது. அந்த பச்சிளம் குருத்தை 9 பாதகர்கள் கோயிலில் அடைத்து வைத்து தொடர்ந்து கற்பழித்து கொன்று குப்பையில் வீசியிருக்கிறார்கள். இதில் பாஜகவினருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிகின்றன.

தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த பஞ்சமா பாதகத்தைக் கண்ணீருடன் கண்டித்துள்ளனர்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

உங்கள் மகளாக இருந்தால்தான் இந்த கொடூரத்தைப் புரிந்து கொள்வீர்களா? ஆசிபா என் மகளும் கூட. ஒரு மனிதனாக, குடிமகனாக, தந்தையாக ஆசிபாவைக் காப்பாற்ற முடியாத கோபத்தை உணர்கிறேன். மன்னி்த்துவிடு மகளே... நீ பத்திரமாக வாழத்தகுந்த நாடாக இதை இன்னும் மாற்றவில்லை. குறைந்தபட்சம், இனி வரும் உன்போன்ற குழந்தைகள் பத்திரமாக வாழவாவது நான் போராடுவேன். ஆழ்ந்த இரங்கல்... உன்னை மறக்க முடியாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

தமன்னா

தமன்னா

இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? சட்டத்தில் திருத்தம் வருவதற்குள் இன்னும் எத்தனை நிர்பயாக்களை பலி கொடுக்கப் போகிறோம்? ஒரு பெண்ணை பாதுகாப்பாக வாழ வைக்காத தேசம் என்ன தேசம்?

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

ஒரு தந்தையாக ஆசிபாவுக்கு நேர்ந்த கொடூரத்துக்காக என் மனம் வலியில் கதறுகிறது. ஒரு சமூகத்தில் இன்னும் எத்தனைக் கொடுமைகளை தாங்கிக் கொள்வது? இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எப்போது?

ஹன்சிகா

ஹன்சிகா

பாவம் அந்தக் குழந்தை. அவளைத் துன்புறுத்திக் கொன்ற பாவிகளுக்கு நரகம் காத்திருக்கிறது. அந்த பாவிகளைத் தூக்கிலிடுங்கள். இந்த அளவுக்கா மனிதர்கள் மோசமாக இருப்பார்கள்?

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

#JusticeforAsifa அந்த விலைமகன்களை தூக்கிலிடுங்கள். போதும்...

ராதிகா

ராதிகா

இது மனிதத்தன்மையற்ற செயல். இந்தக் கொடூரத்தை கேட்கவே முடியவில்லை. அந்த பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

English summary
An eight-year-old was raped and murdered by heartless monsters in Jammu and Kashmir, the incident shocked the entire nation and a lot of Kollywood celebrities are also voicing out against the cruelty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X