»   »  யார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம்! - இதான் கோலிவுட் நிலவரம்

யார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம்! - இதான் கோலிவுட் நிலவரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Kollywood and election results

தேர்தல் முடிந்ததுமே அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நாளிதழ்களில் ஒரு விளம்பரம், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தத்தமது சங்கங்களில் ஒரு கேக் வெட்டுவது என முடிவு செய்து வைத்திருந்தார்களாம் திரையுலகினர்.

தேர்தல் நாள் வரை அதிமுகதான ஜெயிக்கும் என நம்பிய இவர்களில் சிலர், தேர்தல் முடிந்ததும் திடீரென திமுக ஆதரவு மனநிலைக்குத் திரும்பிவிட்டனர். திமுகதான் ஜெயிக்குமாமே? நிஜமா? என்று ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சிலர் இன்று பிற்பகலில் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் முக ஸ்டாலினையும் சந்திக்க நேரம் கூட வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்போது தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வந்துவிட்டதால், நாளிதழ் விளம்பரம், கேக் வெட்டும் நிகழ்வை இன்று மாலையே செய்யவிருக்கிறார்களாம்.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு வெளிப்படையான ஆதரவைத் தந்தது திரையுலகின் பெரிய தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Key trade bodies of Tamil Film Industry is planning to celebrate the success of AIADMK today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil