Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 16 எம்எல்ஏக்கள் உட்பட 62 பேர் கொண்ட டீமை வெயிட்டாக களமிறக்கிய காங்கிரஸ்!
- Finance
வெயிட்டிங்.. ஏறுமா ஏறாதா..நய்கா நிறுவன முதலீட்டளார்கள் எதிர்பார்ப்பு.. நிபுணர்களின் செம ரிப்போர்ட்!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
அவர் என் மனதைவிட்டு மறையவில்லை..அதற்குள் 2வது திருமணமா?.. விளக்கம் கொடுத்த மீனா!
சென்னை : நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் பரவி வரும் செய்திக்கு மீனா விளக்கம் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. ரஜினி,கமல், அஜித், விஜய், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதே போல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
பின்னாடியே
வந்துடுவேன்னு
நினைச்சீங்களா..
அப்பாவிற்கு
பதிலடி
கொடுத்த
மீனா!

மீனாவின் கணவர்
பெங்களுரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறாள். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யா சாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். அதன் பிறகு அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சைபெற்று வந்தார்.

உயிரிழந்தார்
6 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வித்யா சாகருக்கு மாற்று உறுப்புக்காக 3 மாதத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வித்யா சாகர் உயிரிழந்தார். கணவரின் இறுதி சடங்குகளை மீனாவே செய்து முடித்தார்.

ஆறுதல் கூறிய தோழிகள்
கணவரின் மரணத்திற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவுக்கு சங்கவி, சங்கீதா,ரம்பா, குஷ்பு, ராதிகா என பலரும் வீடு தேடி வந்து ஆறுதல் கூறினர். இதையடுத்து, மனதில் இருந்த காயத்தை மறந்த நடிகை மீனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்தார்.

இரண்டாவது திருமணமா?
கடந்த சில நாட்களாக மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோஷியல் மீடியாவில் செய்தி பரவி வருகிறது. மீனாவின் பெற்றோர் மீனாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும், மீனாவின் மகள் நைனிகாவின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவர்கள் மீனாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்கள்.

விளக்கம் கொடுத்த மீனா
இந்நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் என் மனதைவிட்டு மறையவில்லை, அவர் என்னை விட்டு பிரிந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இரண்டாவது திருமணத்தை பற்றி பேசுவது மனதளவில் காயத்தை ஏற்படுத்துகிறது. இப்போது என் கவனம் முழுவதும் என் மகள் மீதும், நடிப்பின் மீது மட்டுமே உள்ளது. இது போன்ற தேவையற்ற வதந்திகளை ஆதாரம் இல்லாமல் பரப்பாதீர்கள் என இணையத்தில் பரவிய வதந்திக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.