Don't Miss!
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- News
ட்ரோன் இயந்திரங்களால் கொசு ஒழிப்பு! சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
கோவை சரளாவா இது?..‘செம்பி‘ பட டிரைலரை பார்த்து வியந்து போன ரசிகர்கள்!
சென்னை : தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரம்மாவுக்குப் பிறகு காமெடியில் கலக்கி வரும் கோவை சரளா,வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள செம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாவும் நிகழ்ந்து வருகிறார் கோவை சரளா.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலொச்சி உள்ள கோவை சரளா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இப்படித்தான் பாடுவேன் இல்லன்னா நடிக்க மாட்டேன்... ஷாஜகான் காமெடி உருவான விதம் பற்றி கோவை சரளா

கோவை சரளா
1983ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் கோவை சரளா. அந்த படத்தில் வரும் விவகாரமான முருங்கைக்காய் காமெடி இவர் மூலமாகத்தான் பிரபலமானது. அனைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் நடித்த கோவை சரளா, சின்னவீடு திரைப்படத்தில் பாக்யராஜின் அம்மாவாக நடித்தார். அந்த படத்தில் 'கோபாலு... கோபாலு' என்று இவர் பேசுவது அனைவரும் பிடித்து போக அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

750க்கும் மேற்பட்ட படங்களில்
கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் கரகாட்டக்காரன் திரைப்படம் இவரை புகழின் உச்சுக்கு கொண்டு சென்றது எனலாம். இந்த படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும், சௌப்பான சுந்தரி காமெடியும் இன்று வரை பிரபலமாக உள்ளது. கிட்டத்தட்ட 750 படங்களுக்கு மேல் நடித்த கோவை சரளா. நடிகர் கமலுடன் சதிலீலாவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.அந்த படத்தில் கோயம்புத்தூர் ஸ்லாங்கில் பட்டைய கிளப்பினார். கமலுடன் இணைந்து மாருகோ... மாருகோ பாடலை பாடி பாடகியாகவும் மாறினார்.

செம்பி படத்தில்
அம்மா, அக்கா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஆச்சி மானோரம் போல மிரட்டும் கோவை சரளா தற்போது, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள 'செம்பி'படத்தில் 70 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாராட்டும் ரசிகர்கள்
இந்நிலையில், செம்பி திரைப்படத்தின் இரண்டாவது டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலரின் ஆரம்பம் முதல் இறுதி வரை கோவை சரளா மிரட்டி உள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார். அந்த படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் கோவை சரளாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.