twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறந்தும் கூட போராடி வென்ற போராளி கருணாநிதி: கொண்டாடும் திரையுலகம்

    By Siva
    |

    Recommended Video

    ட்விட்டரில் கருணாநிதிக்கு இரங்கல் சொன்ன திரையுலக பிரபலங்கள்- வீடியோ

    சென்னை: மெரினாவை பொறுத்தவரை எப்பொழுதுமே நீதி வெல்கிறது என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    விஷால்

    மெரினாவை பொறுத்தவரை எப்பொழுதுமே நீதி வெல்லும். இந்த தீர்ப்பை அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மெரினாவில் கலைஞர் ஐயாவுக்கு இடம் கொடுப்பது நியாயமே என்று தெரிவித்துள்ளார் விஷால்.

    பிரசன்னா

    மரணத்திற்கு பின்னும் போராளியென்று நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார் கலைஞர்! மக்கள் மனதோடு மரினாவிலும் நீங்கா இடம்பிடித்தார். நீதிமன்ற உத்தரவு கேட்டு @mkstalin அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சி நெகிழ்வு என்கிறார் நடிகர் பிரசன்னா.

    ராதிகா

    கலைஞரின் உடலைஅடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு..கலைஞரின் நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி யாகவே நான் கருதுகிறேன். காலம் உள்ளவரை கலைஞரின் புகழ் நிலைத் திருக்கும்.அவரது வெற்றி மகுடத்தை எவராலும் எட்டமுடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுள்ளது என்று ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    விவேக்

    தமிழக அரசுக்கும் நீதி அரசர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்

    ஸ்ரீ ப்ரியா

    வழக்கம் போல் போராட்டம்...
    வழக்கம்போல் வெற்றி...மீண்டும் ஒரு மெரினா புரட்சி...கலைஞர் ஒரு முறை கூட தோற்றதில்லை என்பது நாம் கணும் உன்ண்மை... என்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

    English summary
    Kollywood celebrities have hailed DMK supremo Karunanidhi for being a victor even after his death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X