»   »  "பவர் ஸ்டார்" டைம் ஓவர்... நாமக்கல்லிலிருந்து இறக்குமதியான "கோல்டு ஸ்டார்"

"பவர் ஸ்டார்" டைம் ஓவர்... நாமக்கல்லிலிருந்து இறக்குமதியான "கோல்டு ஸ்டார்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோல்டு ஸ்டார் என்ற பட்டப் பெயருடன் ஒருவர் நாமக்கல்லிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளார்.

பெரிய நடிகர்கள் கூட தாங்கள் நடிக்கும் படங்களில் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டங்களை போட்டுக் கொள்ள தயங்குகின்றனர். ஆனால் ஒரு சில படங்களில் நடிப்பதற்குள் அறிமுக நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டங்களை தாங்களே சூட்டிக் கொள்ளுகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியான முதல் மாணவன் படத்தில் அறிமுகமான கோபி காந்தி தற்போது வீரக்கலை என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்குள் இவர் பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று உதயமாகி விட்டது, ‘கோல்டு ஸ்டார் கோபிகாந்தி மக்கள் சேவை இயக்கம்' இதுதான் அந்த ரசிகர் மன்றத்தின் பெயர்.

பவர் ஸ்டார், சோலார் ஸ்டாரைத் தொடர்ந்து கோலிவுட்டில் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வந்திருக்கும் கோல்டு ஸ்டார் (தங்கம் விக்கிற விலையில கோல்டு ஸ்டார்) ... "ஏன் இப்படி" என்பதை விளக்கி அளித்துள்ள ஒரு பேட்டி:

நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல் இதுதான் கோல்டு ஸ்டார் கோபிகாந்தியின் பிறந்த ஊர், இவரின் தந்தை சுப்ரமணி ஒரு சாக்கு தைக்கும் தொழிலாளி, தாய் ராஜம் பூ வியாபாரி.

தந்தை வழியில்

தந்தை வழியில்

குடும்ப வறுமையால் 8 வதை தாண்டாத கோபிகாந்தி தனது அப்பாவைப்போல சாக்கு தைக்கும் தொழிலாளியாக மாறியிருக்கிறார். சாக்கு தொழிலாளியாக மாறினாலும் சிறு வயதிலிருந்தே சினிமா கனவும் இவருக்கு இருந்திருக்கிறது.

ஒரு நாயகன்

ஒரு நாயகன்

அப்புறம் என்ன தனது லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் சென்னைக்கு பயணம் செய்திருக்கிறார், வியர்வை சிந்தி உழைத்த காசை வைத்த லட்சியக்கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி முதலில் சில குறும்படங்கள் எடுத்து அதில் நாயகனாக நடித்திருக்கிறார் .

சமூக சேவையும்

சமூக சேவையும்

சமூக விழிப்புணர்வு உள்ள அப்படங்களுக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்ததால் சேவை மையம் ஒன்றை தொடங்கி நாமக்கல் வட்டாரத்தில் தனது செல்வாக்கை கணிசமாக உயர்த்திக் கொண்டாராம். இதையடுத்து சினிமா சான்ஸ் தேடியுள்ளார். ஆனால் கைகூடவி்ல்லை.

கோல்டு ஸ்டாரின் பொன்னான சபதம்

கோல்டு ஸ்டாரின் பொன்னான சபதம்

இவரின் சமூக சேவையை பார்த்து சென்னை கலை மன்றம் கோபி காந்திக்கு "கோல்டு ஸ்டார்" என்ற பட்டத்தை கொடுத்திருக்கிறது. தன்னைக் கோலிவுட் கண்டுகொள்ளாமல் போனாலும், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பேன் என்று ஒரு சபதம் செய்து மீண்டும் திரையுலகத்தில் குதித்திருக்கிறார்.

முதல் மாணவன்

முதல் மாணவன்

சபதம் செய்த உற்சாகத்தில் ‘முதல் மாணவன்' படத்தை தொடங்கி, நாயகனாக நடித்து, அதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பும் அளித்திருக்கிறார். மாணவ சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்படுத்திய அப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததாம்.

இரண்டாவது படம் வீரக்கலை

இரண்டாவது படம் வீரக்கலை

முதல் மாணவன் அளித்த தெம்பில் ‘வீரக்கலை' படத்தை ஆரம்பித்து மலை வாழ் இளைஞனாக அப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் ஏராளமான புதியவர்களை கோல்டு ஸ்டார் அறிமுகம் செய்திருக்கிறாராம். யாரெல்லாம் என்று விவரம் தெரியவில்லை.

கோல்டு ஸ்டார் கோபிகாந்தி

கோல்டு ஸ்டார் கோபிகாந்தி

தமிழ்நாட்டில் மன்றம் ஆரம்பிக்க காரணம் வேண்டுமா என்ன? இவர் மீது மீது அன்பு கொண்ட ரசிகர்கள் பலர் மன்றம் தொடங்க முன்வந்தனர். ‘கோல்டு ஸ்டார் கோபிகாந்தி மக்கள் சேவை இயக்கம்' என்ற பெயரில் சாருக்கு அவரது தீவிர விசிறிகள் ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர். வழக்கமான ரசிகர் மன்றம் போல இல்லாமல் மக்களுக்கு ஏதாவது செய்யும் இயக்கமாக இது இருக்குமாம்.

கோல்டு ஸ்டார் கோபிகாந்தி பேரெல்லாம் ரைமிங்காதான் இருக்கு...... பவர் ஸ்டார் மாதிரி ஆகாமல் இருந்தால் சரித்தான்.

Read more about: power star, solar star
English summary
Kollywood Latest Star Gold Star Interview.
Please Wait while comments are loading...