»   »  கதைகளுக்கு தலைப்பா? தலைப்புக்கு கதையா?

கதைகளுக்கு தலைப்பா? தலைப்புக்கு கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் சமீப காலமாக கதையைவிட தலைப்புகளுக்கே அதிகம் மெனக்கெடுகின்றனர். முன்பெல்லாம் ஒரு படத்தின் பூஜையை தலைப்போடுதான் தொடங்குவர்.

இப்போது அப்படிக் கிடையாது படம் வெளியாகப் போகிற நிலையில்தான் படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது.

ரீமேக் என்ற பெயரில் பழைய படங்கள், பாடல்களைக் கெடுத்தது போல பழைய படங்களின் தலைப்புகளையும் புதிய படங்களுக்கு வைத்துக் கொள்கின்றனர்.

இதனால் கதைகளுக்கு தலைப்பா? இல்லை தலைப்புக்கு கதையா? என்ற கேள்வி உருவாவதைத் தடுக்க முடியவில்லை.

ரஜினி

ரஜினி

தமிழ் சினிமாவில் ரஜினியின் தலைப்புகளுக்கு என்றும் ஒரு வசீகரம் இருக்கிறது. நெற்றிக்கண், பொல்லாதவன், பாட்ஷா, படையப்பா, உழைப்பாளி, மனிதன், அண்ணாமலை, தளபதி என்று ஒவ்வொரு ரஜினி தலைப்புமே கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கக் கூடியவை. அதனால் இன்றளவும் அவரது படங்களின் தலைப்புகளுக்கு ஏக கிராக்கி இருக்கிறது.

பில்லா

பில்லா

ரஜினி நடித்த படங்கள் மற்றும் அவரின் தலைப்புகளை வைத்து வெற்றியைத் தொட்டவர் அஜீத்(பில்லா) மட்டுமே. பொல்லாதவன், படிக்காதவன் என்று தலைப்புகளில் வெற்றி பெற்றாலும் படங்களின் ரீமேக்கில் தனுஷ் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதற்காக ரஜினி தலைப்புகளை தங்கள் படங்களுக்கு வைப்பதை யாரும் நிறுத்தவில்லை. சொல்லப் போனால் அதிகரித்து தான் வருகிறது.

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை

ரஜினி தலைப்பு படப்பிடிப்பில் இருக்கும் சில படங்களுக்கு நெஞ்சம் மறப்பதில்லை, ஆண்டவன் கட்டளை என்று பழைய படங்களின் தலைப்புகளை வைத்துள்ளனர். இதுதவிர புகழ்பெற்ற பாடல்களின் வரிகளை தங்கள் படங்களுக்கு தலைப்பாக வைக்கும் பழக்கமும் தொடங்கியிருக்கிறது. கண்ணதாசன் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு 'வதனமே சந்திர பிம்பமோ' என்று 'சிவகவி' படத்தின் பாடல் வரியை தலைப்பாக்கியுள்ளனர்.

சமீபத்திய தலைப்புகள்

சமீபத்திய தலைப்புகள்

இதுதவிர செம போத ஆகாதா, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், கீ, செய், ரெமோ, பைசா, கட்டப்பாவக் காணோம் படப்பிடிப்பில் இருக்கும் சில படங்களின் தலைப்புகள். மேலே பார்த்த தலைப்புகளுக்கும், படங்களின் தலைப்புகளுக்கும் தொடர்பு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை படங்கள் வெளியானால் தலைப்புகளுக்கும், கதைக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

இப்போதெல்லாம் படங்களுக்கு தொடர்புடைய தலைப்புகளை யார் வைக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.

English summary
Latest Tamil Movie Titles Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil