twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் கொரோனாவால் மிரளும் தமிழ் சினிமா... ரூ.150 கோடி நஷ்டம்... தாங்குமா, தவிக்குமா?

    By
    |

    சென்னை: தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தமிழ் சினிமாவுக்கு சுமார் 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    Recommended Video

    கொரோனா விழிப்புணர்வு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டார் நடிகை மஞ்சு வாரியர்! - வீடியோ

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

    இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    990 தியேட்டர்கள்

    990 தியேட்டர்கள்

    அதன் ஒரு கட்டமாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை வரும் 31 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன. வரும் 31 ஆம் தேதி வரை தியேட்டர்களை மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

    பைனான்ஸ்

    பைனான்ஸ்

    வரும் 19 ஆம் தேதி முதல், சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட உள்ளன. இதனால் தமிழ் சினிமா கடும் நஷ்டத்தை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள், கையில் பணத்தை வைத்துக் கொண்டு படம் தயாரிப்பதில்லை. பைனான்ஸ் வாங்கியே படம் எடுக்கின்றனர். இதனால் வட்டி அதிகமாகும் என்பதால் பலத்த நஷ்டத்தை படங்கள் சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

    150 கோடி ரூபாய்

    150 கோடி ரூபாய்

    தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவாவிடம் இதுபற்றி கேட்டபோது, 'வட்டிதான் இங்கு முக்கியமான விஷயம். தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்புகள் ரத்து போன்ற காரணத்தால், கண்டிப்பாக சுமார் 150 கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழ் சினிமா சந்திக்கும். படப்பிடிப்புகளின் தாமதத்தால் ரிலீஸும் தள்ளிப் போகும். இதனால் மேலும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்.

    தனஞ்செயன்

    தனஞ்செயன்

    தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, ' தற்போது தமிழ் சினிமாவில் சுமார் 600 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இதில் பத்து சதவிகிதம் கண்டிப்பாக நஷ்டம் வர வாய்ப்பிருக்கிறது. மொத்தமாக சுமார் 150, 160 கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழ் சினிமா சந்திக்கும் என்றார். அதோடு, நாள் சம்பளம் வாங்கும் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையானப் பாதிப்பை சந்திப்பார்கள்' என்றார்.

    பொருளாதார இழப்பு

    பொருளாதார இழப்பு

    இந்த நஷ்டம் வரும் 31 ஆம் தேதி வரைதான். இன்னும் தொடர்ந்தால், பொருளாதார இழப்பு ரூ.250, ரூ.300 கோடியை தாண்டும் என்கிறார்கள், தமிழ் சினிமா வல்லுனர்கள். ஏனென்றால் பெரிய படங்களான விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள், ஏப்ரல் மாதத்தில்தான் ரிலீஸ் ஆக இருக்கின்றன.

    தெலுங்கு சினிமா

    தெலுங்கு சினிமா

    இதே போல தெலுங்கு சினிமா இன்டஸ்ட்ரியும் உடனடியாக, சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரலுக்கு பிறகும் இந்த நிலைத் தொடர்ந்தால், ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடிவரை நஷ்டத்தை சந்திக்கும் என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார்கள், அங்குள்ள தயாரிப்பாளர்கள்.

    English summary
    Kollywood may loss 150 crore due to corona outbreak
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X