»   »  இரும்பு இதயம் நின்று போனதில் நொறுங்கும் இதயங்கள் எத்தனை அம்மா: கதறும் கோலிவுட்

இரும்பு இதயம் நின்று போனதில் நொறுங்கும் இதயங்கள் எத்தனை அம்மா: கதறும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மரண செய்தி அறந்து தமிழ் திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் ஜெயலலிதா குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விவேக்

இரும்பு இதயம் நின்று போனதில் நொறுங்கும் இதயங்கள் எத்தனை அம்மா!When matchless lioness chooses to sleep;the motherless people endlessly weep!

த்ரிஷா

உங்களை போன்று இனி வேறு யாரும் இல்லை #ironlady #TamilNadusdaughter #myalmamatter #ChurchParkian #mostcherishedmemories #darkestdayinTN #heartbroke

விஷால்

அதற்குள் சென்றுவிட்டீர்களே. சிறந்த பெண், தலைவர், நிர்வாகி #Amma #jayalalithaa #IronLady எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

குஷ்பு

வெற்றிடம் எப்பொழுதுமே இருக்கும்... நீங்கள் இல்லை என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை. இரண்டு விரலை காட்டி நீங்கள் கையசைப்பதை பார்க்க வேண்டும்.

தனுஷ்

#RIPAmma. தமிழக அரசியலின் இன்ஸ்பிரேஷனல் சகாப்தம் முடிந்தது. வெற்றிடத்தை விட்டுத் சென்றுள்ளீர்கள். #IronLady. #Shattered #empty #darkday

English summary
Kollywood celebs mourn the demise of CM Jayalalithaa who was part of their industry once.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil