Just In
- 29 min ago
தொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா!
- 1 hr ago
பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!
- 4 hrs ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
- 13 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
Don't Miss!
- Sports
இந்திய இளம் திறமைகளை சிறப்பாக மேம்படுத்தியிருக்காரு டிராவிட்... ரஹானே பாராட்டு
- News
வயசு பெண்களை.. நிர்வாணமாக்கி.. ஒருவர் பூஜை ரூமில்.. இன்னொருவர் மாடியில்.. அலறிப்போன சித்தூர்
- Automobiles
வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மோடி அரசு அதிரடி திட்டம்... யாரெல்லாம் கட்டணும்? எவ்வளவு கட்டணும் தெரியுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய சினிமா தயாரிப்பாளர்!!
சென்னை: சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை வைத்து, அத்தகைய புரோக்கர்கள் சிலரிடம் வாடிக்கையர் போல பேசி, பெண்களைக் கேட்டனர்.
மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.
அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் செல்வ நாயகன் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது 'பேசாதே' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.