»   »  மீண்டும் ஒரு காதல் கதை... ரொமான்ஸ் மூடுக்கு திரும்பும் கோலிவுட்!

மீண்டும் ஒரு காதல் கதை... ரொமான்ஸ் மூடுக்கு திரும்பும் கோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் ஆக்‌ஷன், ஹாரர், காமெடி படங்கள் வந்தாலும் காதல் படங்களுக்கு என்றுமே வரவேற்பு இருக்கும். காதலுக்கு எப்படி அழிவு என்பது இல்லையோ அதே போல் தான் காதல் படங்களும்.

இன்றைக்கும் காலம் கடந்து நிற்கும் படங்கள் எல்லாம் மெல்லிய காதல் படங்கள்தான். சில ஆண்டுகளாக பேய் பிடித்து ஆட்டிய தமிழ் சினிமாவை விரைவில் மீட்டெடுக்க வருகின்றன காதல் படங்கள். இன்று வெளியாகவிருக்கும் மீண்டும் ஒரு காதல் கதை அதற்கான தொடக்கத்தை விதைத்துள்ளது.


மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த 'தட்டத்தின் மறையத்து' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இது. ஒரு இந்து பையனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்குமான காதல்தான் கதை என்றாலும் மென்மையாக சொன்னதில் ரசிகர்களின் மனதை கவர்கிறது மீண்டும் ஒரு காதல் கதை.


தமிழ் சினிமா இருக்கும் சூழலில் இப்படி ஒரு படம் எடுக்க துணிந்ததற்காகவே மித்ரனுக்கு ஒரு பொக்கே கொடுக்க வேண்டும்.


Kollywood returns to Romance mood

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என தனுஷை வைத்து ஹிட்கள் தந்தவர்தான் இந்த மித்ரன். புதுமுகம் வால்டர் பிலிப்ஸும், இஷா தல்வாரும் போட்டி போட்டு காதலித்து ரசிகர்கள் மனசைக் கவர்ந்திருக்கிறார்கள். காதலிக்க வைக்கிறார்கள். நல்ல பாடல்களுடன் காமெடியான காதல் படமாக வெளியாகி இருக்கும் மீண்டும் ஒரு காதல் கதை மூலம் மீண்டும் காதல் ட்ரெண்ட் தொடங்கி இருக்கிறது.


Kollywood returns to Romance mood

அடுத்து டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் நடிக்கும் கவலை வேண்டாம், கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் காற்று வெளியிடை, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரெமோ என வரிசையாக


காதலை மையமாக கொண்ட படங்களாக களம் இறங்குகின்றன.


#IshaTalwar' Exclusive Interview on #MeendumOruKadhalKadhaiEnglish summary
Kollywood is returning to Romance mood through Meendum Oru Kadhal Kathai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil