»   »  சாந்தனு தொடங்கி சந்திரன் வரை...கோலிவுட்டில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள்

சாந்தனு தொடங்கி சந்திரன் வரை...கோலிவுட்டில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் வழக்கத்தை விட இளம் காதல் ஜோடிகளின் திருமணம் இந்த வருடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. தற்போது உள்ள இளம்நடிகர்கள் பலரும் காதல் திருமணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

பொதுவாக திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் நடிக, நடிகையர் இடையே காதல் மலர்வதும் அது திருமணத்தில் முடிவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அந்த வரிசையில் ஒருசில நடிகர்களின் காதல் கதைகளை இங்கே நாம் காணலாம்.

சாந்தனு - கீர்த்தி

சாந்தனு - கீர்த்தி

நடிகரும், இயக்குநர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு டிவி தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து மணம் புரிந்து கொண்டார். பெற்றோர் சம்மத்ததுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதியன்று நடந்த இந்த காதல் திருமணத்தில் நடிகர் விஜய் தாலி எடுத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆரி - நதியா

ஆரி - நதியா

நெடுஞ்சாலை, மாயா படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரி நேற்று காலை தனது நீண்ட நாள் காதலியான நதியாவை பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டார். லண்டனில் வசிக்கும் நதியாவிற்கும், ஆரிக்கும் இடையே மலர்ந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறி, நேற்று காலை திருமணத்தில் முடிந்தது.

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

அபியும் நானும், தனி ஒருவன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற கணேஷ் வெங்கட்ராம் தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நிஷாவைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். வரும் நவம்பர் 22 ம் தேதி இவர்கள் இருவரின் திருமணம் நடைபெறவிருக்கிறது. தற்போது திருமணத்திற்கு முன்னரான ப்ரீ- போட்டோ ஷூட் பணிகளை இருவரும் மேற்கொண்டு இருக்கின்றனர்.

கயல் சந்திரன் - அஞ்சனா

கயல் சந்திரன் - அஞ்சனா

இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கின்றனர் கயல் நாயகன் சந்திரனும், டிவி தொகுப்பாளினி அஞ்சனாவும். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரியவிருக்கின்றனர். நிச்சயதார்த்தம் இந்த மாதம் 29 ம் தேதியும், திருமணத்தை அடுத்த வருடம் மார்ச் 10 ம் தேதியிலும் வைத்திருக்கிறது இந்த ஜோடி.

மேலே சொன்ன 4 ஜோடிகளில் 3 பேர் தங்கள் வாழ்க்கைத் துணையாக தொகுப்பாளினிகளை தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது!

English summary
Kollywood romantic weddings in 2015 will increase The Best Examples are Shanthanu- Keerthi, Aari -Nadiya, Ganesh Venkatram - Nisha and Kayal Chandran - Anjana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil