»   »  வாக்களித்த தல, தளபதி, ரஜினி, கமல்: 'சுள்ளான்' எங்கப்பா?

வாக்களித்த தல, தளபதி, ரஜினி, கமல்: 'சுள்ளான்' எங்கப்பா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலக பிரபலங்கள் வாக்களித்ததுடன் மக்களையும் வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. தமிழ் திரையுலக பிரபலங்கள் அஜீத், விஜய், ரஜினி, கமல், ஆர்யா, விவேக், விஷால், கார்த்தி, த்ரிஷா, வரலட்சுமி என ஏராளமானோர் வாக்களித்துள்ளனர்.

பிரபலங்கள் வாக்களித்துவிட்டு மை வைக்கப்பட்ட விரலுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

அஜீத்

அஜீத்

வாக்குப்பதிவு துவங்கிய கையோடு முதல் ஆளாக வாக்களித்தார் தல அஜீத்.

விவேக்

இந்திய திருநாட்டின் பிரஜை நான். என் உரிமை, என் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீங்கள்? Brave the heat but go n vote/right என நடிகர் விவேக்

விஷால்

விஷால்

விஷால் தனது நண்பன் ஆர்யாவுடன் சென்று வாக்களித்தார். மேலும் மக்களை வாக்களிக்குமாறும் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

வரலட்சுமி

#TNElection2016 #TN100Percent நீங்கள் விரும்பும் மாற்றமாக இருங்கள். நான் வாக்களித்துவிட்டேன். நீங்கள் ..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

பிரசன்னா

பிரசன்னா

நான் என் ஜனநாயக கடமையை செய்துவிட்டேன், நீங்கள்? நண்ரபர்களே, தயவு செய்து வாக்களியுங்கள் என நடிகர் பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சினேகா

சினேகா

பொறுப்பான குடிமகளாக கடமையை செய்ததில் பெருமைப்படுகிறேன். மக்களே நீங்கள் வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் நடிகை சினேகா.

வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து காலையிலேயே வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கமல்

கமல்

உலக நாயகன் கமல்ஹாஸன் தனது இளைய மகள் அக்ஷரா, நடிகை கவுதமியுடன் வந்து வாக்களித்தார்.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷா வாக்களித்துவிட்டு மை வைக்கப்பட்ட விரலை காட்டியபடி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா வாக்களித்துவிட்டு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.

விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய்யும் வாக்களித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு வந்த அவர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தார்.

பிரபு

பிரபு

இளையதிலகம் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

நாசர்

நடிகர் நாசர் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

சூரி

எப்பவும் பள்ளிக்கூடம் போக பயமா இருக்கும். இன்னிக்கு பெருமையா இருந்துச்சு என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் சமத்துப்பையனாக வாக்களித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அதர்வா

அதர்வா

நான் வாக்களித்துவிட்டேன். நீங்களும் வாக்களியுங்கள் என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்தும் வாக்களித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

மீனா

மீனா

நடிகை மீனா காலையிலேயே வாக்களித்துவிட்டு சென்றார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

நான் வாக்களித்துவிட்டேன். தயவு செய்து வாக்களியுங்கள். வாக்களிப்பது நமது கடமை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

English summary
Kollywood celebrities including Rajini, Kamal, Ajith, Vijay, Sivakarthikeyan have casted their votes and insisted people to vote.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil