For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டெல்லி கேங் ரேப்... கொந்தளிக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்!

  By Shankar
  |

  டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயதுப் பெண்ணை கொடியவர்கள் இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்து கூட்டாகக் கற்பழித்துள்ள சம்பவம் நாட்டையே கொந்தளிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

  மனதளவில் அன்றே இறந்துவிட்ட அந்தப் பெண் இப்போது உடல் ரீதியாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கற்பழித்த காமுகர்களை விசாரணையின்றி தூக்கில் போட அனைவருமே ஒருமனதாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  எத்தனையோ கொடிய சம்பவங்களை காட்சிகளாக்கும் சினிமாக்காரர்கள் கூட, தங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வக்கிர நிகழ்வாக, வன்முறை வெறியாட்டமாக இதைப் பார்க்கின்றனர்.

  நமது கோலிவுட் நட்சத்திரங்கள் இந்த சம்பவம் குறித்து என்ன கூறுகிறார்கள்...

  நமீதா

  நமீதா

  நிச்சயம் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்தான். இதை அனைவருமே வன்மையாகக் கண்டிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக இனி இதுபோன்ற ஒரு கொடுமை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  நயன்தாரா

  நயன்தாரா

  தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்த சம்பவம் இது. இன்னும் கூட நான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. அந்த கொடியவர்கள் மீது இம்மியளவுக்குக் கூட இரக்கம் காட்டக் கூடாது.

  சூர்யா

  சூர்யா

  நீதி அமைப்பு முறை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த கொடிய செயல். அந்தப் பெண்ணை சீரழித்தவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.

  தமன்னா

  தமன்னா

  ஏதாவது ஒரு வழியில் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் இப்படியெல்லாம் கொடிய செயலில் இறங்க வைக்கிறது. சட்டங்களை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

  மனிதத்தனமற்ற செயல் இது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது, திரும்பத் திரும்ப இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் செயலில் இறங்குவதுதான். அந்தப் பெண்ணை சீரழித்தவர்களை தூக்கில் போடுவதுதான், பெரிய விளைவை ஏற்படுத்தும்.

  த்ரிஷா

  த்ரிஷா

  அரபு நாடுகளில் உள்ளதுபோல தீவிரமான தண்டனை முறைகள் தேவை. அந்தப் பெண்ணை சீரழித்தவர்களுக்கு தூக்கு தண்டனையை உடனடியாக தரவேண்டும். இந்தக் கருத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்காது என நம்புகிறேன்.

  ஷாம்

  ஷாம்

  என்ன நடக்கிறது நம் நாட்டில் என ஒரு நிமிடம் ஆடிப் போனேன் டெல்லி கற்பழிப்பு செய்தியைப் படித்ததும். என்னால் தூங்க முடியவில்லை. பெண் என்பவளும் நம்மைப் போன்ற ஒரு பிறவிதானே. அவள் மீது ஏன் இத்தனை வன்மம்... இனி யாரும் இதுபோன்ற செயல்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தண்டனைகள் கடுமையாக வேண்டும்.

  அமலா பால்

  அமலா பால்

  சட்டமும் போலீசும் இந்த முறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சவூதி அரேபியாவில் தரப்படுவதைப் போல, விசாரணையற்ற மரண தண்டனையை அந்த கொடியவர்களுக்குத் தர வேண்டும்.

  ஸ்ரேயா

  ஸ்ரேயா

  அந்தப் பாவிகள் மீது ஈவு இரக்கமே காட்டக் கூடாது. உடனடியாக தூக்கில் தொங்கவிட வேண்டும். தண்டனை முறைகளில் மாற்றம் கொண்டுவருவதை இப்போதே தொடங்க வேண்டும்.

  English summary
  Kollywood stars strongly condemned the Delhi Gang rape case and urged for immediate capitol punishment for the rapists.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X