ஏங்க உச்சக்கட்ட அதிர்ச்சி.. கூமாபட்டி தங்கபாண்டிக்கு விபத்து.. என்ன ஆச்சு?.. இப்போதானே ஃபேமஸ் ஆனாரு

சென்னை: சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு ஏங்க என்ற குரல் ஒலியை கேட்டாலே அனைவருமே சிரித்து மகிழ்ந்தார்கள். கூமாபட்டி என்ற ஊரை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் தனது ஊரை சில வீடியோக்கள் மூலம் பிரபலப்படுத்தி தானும் பிரபலமடைந்துவிட்டார். இப்போது தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மேற்கொண்டு பிரபலமாகியிருக்கிறார்.

யூடியூபில் சேனலோ, சமூக வலைதளங்கில் கணக்கு வைத்து திறமையும், நேரமும் சரியாக இருந்தால் மக்களிடம் பிரபலமாகிவிடலாம் என்ற நிலைமை இருக்கிறது. அப்படி பிரபலமான பலர் இருக்கிறார்கள். அவர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் மின்னிவருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் லேட்டஸ்ட்டாக வந்திருப்பவர்தான் கூமாபட்டி பகுதியை சேர்ந்த தங்கபாண்டி.

யார் இந்த தங்கபாண்டி: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகே இருக்கும் கூமாபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் தங்கபாண்டி. அடிப்படையில் பட்டதாரியான இவர் தீவிரமான புத்தக வாசிப்பாளர். காவல் துறை பணிக்கு விண்ணப்பம் செய்து ஒரு மதிப்பெண்ணில் அந்த வேலையை விட்ட அவர்; மனம் தளராமல் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் சில மாதங்களுக்கு முன்பு 'ஏங்க' என்ற கூறி தனது ஊரான கூமாபட்டியை பற்றி பெருமையாக பேசினார்.

Koomapatti Thangapandi met with an accident while traveling by bus
Photo Credit:

படு ஃபேமஸ்: அவரது உச்சரிப்பு வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். பலரும் அவரிடம் சென்று பேட்டி எடுத்தார்கள். அந்தப் பேட்டியின்போதுதான் தான் எவ்வளவு பெரிய வாசிப்பாளர் என்பதை ஊரறிய செய்தார். சமூக வலைதளத்தி ஃபேமஸ் ஆகிவிட்டாலே அடுத்தது சின்னத்திரைதான் என்ற விதிக்கேற்ப தனியார் சேனல் நடத்தும் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாந்தினிக்கு ஜோடியாக நடனம் ஆடிவருகிறார்.

இதிலும் கவனம்: இந்த நிகழ்ச்சியிலும் தனது வித்தியாசமான உச்சரிப்பு, உடல்மொழிகள் எல்லாம் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக சாந்தினியிடம் அவர் செய்யும் லந்துக்கள் அனைத்துமே உச்சக்கட்டம். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் தங்கபாண்டி காயமும் அடைந்திருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதி: அதாவது சிங்கிள் பசங்க ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையிலிருந்து கூமாபட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தார் அவர். கிருஷ்ணன்கோவில் அருகே பேருந்து சென்றபோது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்திருக்கிறார். அப்போது தங்கபாண்டியின் கை கதவில் மோதியதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X