»   »  கோவை சரளாவை காமெடி பேயாகக் காட்டும் லாரன்ஸ்!

கோவை சரளாவை காமெடி பேயாகக் காட்டும் லாரன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய்க் கதை மன்னன் என்று பெயர் வாங்காமல் ஓய மாட்டார் போலிருக்கிறது ராகவா லாரன்ஸ். அடுத்தடுத்து அவர் நடிப்பில், இயக்கத்தில் மூன்று பேயப் படங்கள் வரவிருக்கின்றன.

இப்போது அவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவாவுக்குப் பிறகு, நாகா படத்தை இயக்கி நடிக்கிறார். இது முனி படத்தின் நான்காம் பாகம் ஆகும்.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்

இதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். முனி முதல் பாகத்தில் நடித்தவர் ராஜ்கிரண்தான். இப்போது மீண்டும் லாரன்சுடன் இணைகிறார்.

கோவை சரளா

கோவை சரளா

முனி படத்திலிருந்து ராகவா லாரன்சின் அனைத்துப் படங்களிலும் அவருக்கு அம்மாவாக நடித்து வருபவர் கோவை சரளா. இந்தப் படத்தில் கோவை சரளாவை பேயாக்கி, காமெடி பண்ணப் போகிறாராம் லாரன்ஸ்.

ஒரு மாறுதலுக்கு..

ஒரு மாறுதலுக்கு..

கோவை சரளா இதுவரை எந்தப் படத்திலும் பேய் வேடம் போட்டதில்லை. ஒரு மாறுதலுக்கு பேயாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிறார் என்கிறது நாகா யூனிட்.

முனி 5

முனி 5

இந்தப் படத்துக்குப் பிறகு முனி படத்தின் 5-ம் பாகத்தையும் உருவாக்கப் போகிறாராம் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு இரண்டாம் பாகம் என்பதே பெரிய விஷயம். ராகவா லாரன்ஸ்தான் முதல் முறையாக 5 பாகங்கள் வரை எடுக்கப் போகிறார்.

English summary
Raghava Lawrence is going to portray Kovai Sarala role as a comedy ghost in his Muni 4.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil