»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் வீடு சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ளது.இரவு வீட்டில் கவுண்டமணி தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு திருடன் வீட்டு ஜன்னல் வழியாக கம்பியை விட்டு,டேபிள் மீது வைத்திருந்த நகைப் பெட்டியைத் திருடிச் சென்றுள்ளான்.

அந்த நகைப் பெட்டியில் 30 பவுன் நகைகள் இருந்ததாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கவுண்டமணிகொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று திருடனை அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸ்-நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சிலரும்,ஒரு போலீஸ்காரரும் பார்த்து விட்டு துரத்திச் சென்றுள்ளனர், ஆனால் அந்த திருடன் தப்பி ஓடி விட்டான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil