»   »  அரசியலுக்கு ரஜினி வந்து பார்த்தாதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு! - இது ஓபிஎஸ் அணி கருத்து

அரசியலுக்கு ரஜினி வந்து பார்த்தாதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு! - இது ஓபிஎஸ் அணி கருத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும் என்று ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி கூறியுள்ளார்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் சென்றுள்ள அவரது அணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கே.பி.முனுசாமி ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு குறித்து கருத்து கூறுகையில், "இன்று ரஜினிகாந்த் தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஒரு வார்த்தை பேசியதற்கே அவரால் தாங்க முடியவில்லை.


KP Munusamy's comment on Rajini politics

அவர் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும். இங்கு எவ்வளவு சோதனைகள் ஏச்சுகள், பேச்சுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் வந்து பார்க்கட்டும்.


நடிப்பு தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர் உணர்வார்," என்றார்.


ரஜினி தனது இன்றைய பேச்சில் முக ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் குறித்து நல்லவிதமான கருத்துக்களைத் தெரிவித்தார். ஆனால் அதிமுக தலைவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

English summary
ADMK OPS group spokesman KP Munusamy commented on Rajini's political speech.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil