»   »  அரசியலில் குதித்தார் 'காதலுக்கு மரியாதை' கேபிஏசி லலிதா!

அரசியலில் குதித்தார் 'காதலுக்கு மரியாதை' கேபிஏசி லலிதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் பாட்டி வேடத்தில் நடித்த, பிரபல மலையாள குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதா கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

அவருக்கு ஆதரவு தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. தற்போது கேரளாவில் கம்யூனிஸ்ட் அலை வீசுவதால் லலிதா வெற்றி பெறுவது உறுதி என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

தமிழகத்தைப் போல இல்லை கேரளா. மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது வெகு வெகு அபூர்வம். அங்கு நடிகர் நடிகைகள் என்ற தகுதியைப் பார்க்க மாட்டார்கள் மக்கள். எனவே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த மலையாளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அரசியலில் குதித்த லலிதா

அரசியலில் குதித்த லலிதா

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான கேபிஏசி லலிதா அரசியலுக்கு வந்துள்ளார். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகை.

திருச்சூரில் போட்டி

திருச்சூரில் போட்டி

தற்போது திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி சட்டசபைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார் லலிதா. அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இயக்குநர் பரதனின் மனைவி

இயக்குநர் பரதனின் மனைவி

மறைந்த பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவிதான் லலிதா. திருமணத்திற்கு முன்பு ஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பரதனின் படங்கள்தான் அதில் அதிகம்.

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை

தமிழிலிலும் சில படங்களில் நடித்துள்ளார் லலிதா. அதில் முக்கியமானது காதலுக்கு மரியாதை. அதில் ராதாரவி, தலைவாசல் விஜய், ஷாலினி ஆகியோருக்கு தாயாராக நடித்திருந்தார்.

பெண்கள் நலனுக்காகப் போராடுவேன்

பெண்கள் நலனுக்காகப் போராடுவேன்

தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், பெண்களுக்குத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்காகப் போராடப் போகிறேன். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறினார் லலிதா.

Read more about: kerala election
English summary
Noted Malayalam actrress KPAC Lalitha has entered into politics. She has acted in many films including Tamil super hit Kathalukku Mariyathai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil