KPY பாலாவின் Gandhi Kannadi Box Office.. எவ்வளவு வசூல் வந்திருக்கணும்?.. நடிகர் போடும் கணக்கு

சென்னை: சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர் பாலா. அன்றிலிருந்து KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பாலாவை பொறுத்தவரை ஓடி ஓடி உதவி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் காந்தி கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். கடந்த ஐந்தாம் தேதி ரிலீஸான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட பாலா; கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார். அவருக்கு சினிமாவிலு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

பாலாவின் உதவிகள்: சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.

KPY Bala s Gandhi Kannadi should have collected Rs 50 crore at the box office says RK Suresh

ஆம்புலன்ஸ் தந்து உதவிய பாலா: அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள். அதே சமயம் அவர் உதவி செய்வதற்கும், செய்ததற்கும் எதிராகவும் கமெண்ட்ஸ்கள் வரத்தான் செய்கின்றன.

காந்தி கண்ணாடி: சூழல் இப்படி இருக்க காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் பாலா. பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தத் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி ரிலீஸானது. அன்றைய நாள்தான் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. காந்தி கண்ணாடி படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. இதுவரை நான்கு கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.சுரேஷ் பேட்டி: இந்நிலையில் காந்தி கண்ணாடி திரைப்படம் குறித்து பிரபல நடிகரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், "அந்த பாலா தம்பிக்கு உண்மையிலே பெரிய மனசு. அவரிடம் 1000 ரூபாயை கொடுத்தால் 900 ரூபாயை மற்றவர்களுக்காக செலவழிக்கிறார். அவர் காந்தி கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதுவரை 3 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. உண்மையில் பாலா மனதுக்கு அந்தப் படம் 50 கோடி ரூபாய்வரை பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்ட் செய்திருக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Read more about: kpy bala பாலா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X