Gandhi Kannadi Box Office: காந்தி கண்ணாடி இதுவரை உலகளவில் இத்தனை கோடி வசூலா? கேபிஒய் பாலாவுக்கு வெற்றி!
சென்னை: இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸிலேயே லாபத்தை பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் அதே விஜய் டிவியில் இருந்து வந்த கேபிஒய் பாலாவின் காந்தி கண்ணாடி படமும் வெளியானது.
மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள், அனுஷ்காவின் காட்டி உள்ளிட்ட படங்களும் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகின. ஆனால், அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூல் வேட்டை நடத்த முடியாமல் திணறின.

கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமான காந்தி கண்ணாடி படத்துக்கு குறைவான தியேட்டர்களே கிடைத்த நிலையிலும் நல்ல வசூலை அள்ளியுள்ளார் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மதராஸி வசூல் குறைவு: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்த மதராஸி படத்தின் வசூல் 90 கோடியை உலகளவில் கடந்தாலும் படத்தின் பட்ஜெடி சுமார் 150 கோடி ரூபாய் என சொல்லப்படும் நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை சிவகார்த்திகேயனின் மதராஸி படம் பெறவில்லை. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் வெளியான காந்தி கண்ணாடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
காந்தி கண்ணாடி உலக வசூல்: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக வந்து விஜய் டிவியில் கோமாளியாகவும் தொகுப்பாளராகவும் வளர்ந்த கேபிஒய் பாலா ஏகப்பட்ட கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து ரியல் லைஃப் ஹீரோவாக மாறினார். சினிமாவிலும் ஹீரோவாக நினைத்த அவர் காந்தி கண்ணாடி படம் மூலம் அறிமுகமானார். 3.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காந்தி கண்ணாடி படம் உருவான நிலையில், இந்தியாவிலேயே 3.8 கோடி வசூலையும் உலகளவில் 4.27 கோடி வசூலையும் பெற்று தியேட்டரிக்கல் வசூல் மூலமே படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக வசூலை பார்த்துள்ளார் என சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.
பல படங்கள் தோல்வி: இந்த ஆண்டு இதுவரை 200 படங்கள் வெளியாகி இருந்தால் அதில் 190 படங்கள் தோல்வியை தழுவியிருக்கும் என திரை பிரபலங்கள் கூறி வரும் நிலையில், ஒரு சில படங்கள் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 5 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படாமல் பார்த்துக் கொண்டன. ஃபயர், மர்மர் உள்ளிட்ட படங்கள் 5 கோடி வசூலை ஈட்டியதாக தனஞ்செயன் தெரிவித்த நிலையில், அந்த வரிசையில் காந்தி கண்ணாடி படமும் இடம்பெறும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











