»   »  3 படத்துக்காக 3 நாட்கள் முக்கி முக்கி நடித்துக் கொடுத்த கிருஷ்ணா!

3 படத்துக்காக 3 நாட்கள் முக்கி முக்கி நடித்துக் கொடுத்த கிருஷ்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் புதிதாக தான் நடித்து வருகின்ற 3 படங்களையும் முடித்துக் கொடுக்க 72 மணி நேரம் தொடர்ச்சியாக நடித்துள்ளார் நடிகர் கிருஷ்ணா.

இளையதலைமுறை நாயகர்களில் நல்ல வளர்ச்சியை அடைந்து வருபவர் நடிகர் கிருஷ்ணா.

தற்போது இவர் யட்சன், விழித்திரு, கிரகணம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

72 மணி நேர படபிடிப்பு:

72 மணி நேர படபிடிப்பு:

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். அதுதான் டாக் ஆப் தி டவுனாக மாறியுள்ளது.

இறுதி கட்ட படப்பிடிப்பு:

இறுதி கட்ட படப்பிடிப்பு:

இதுகுறித்து அவர் பேசியதாவது, "யட்சன் படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது. மற்றும் விழித்திரு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.

மூன்று நாட்கள் படபிடிப்பு:

மூன்று நாட்கள் படபிடிப்பு:

தேதிகள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 18, 19 என தொடர்ந்து இரண்டு நாட்கள் யட்சன் மற்றும் விழித்திரு படங்களுக்கும், இரவு நேரங்களில் கிரகணம் படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு ஏப்ரல் 20 ஆம் தேதி காலை வரையும் சென்றது.

மகிழ்ச்சியான படப்பிடிப்பு:

மகிழ்ச்சியான படப்பிடிப்பு:

இது நிதமும் நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல. எப்போதோ ஒரு முறை நடப்பதுதான். அதனால் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று நடித்துக் கொடுத்தேன். இப்படி ஷூட்டிங், ஷூட்டிங் என அங்குமிங்குமாய் பறந்ததை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

அனைவருக்கும் நன்றி:

அனைவருக்கும் நன்றி:

எனினும் இந்த அலைச்சலாலும், தொடர் உழைப்பினாலும் என் உடல்நிலை கெடாமலும் பார்த்துக் கொண்டேன். இந்த மூன்று நாட்களும் எனக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து படக் குழுவினருக்கும் நன்றி" என்று பணிவுடன் கூறினார்.

English summary
Kreshna is busy shooting various projects. "Vishnuvardhan wanted to complete Yatchan and there was some work left to do in Vizhithiru, which is also in the final schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil