Just In
- 13 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 30 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 1 hr ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- News
காந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை சொன்னா தங்கக்காசு பரிசு.. கிரிஷ்ணம் படக்குழு அறிவிப்பு!

சென்னை: கிரிஷ்ணம் படக்குழுவினர் புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர்.
இன்றைய சூழலின் தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு புரோமோஷன் தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு விதமான யுக்திகளை படக்குழுவினர் கையாளுகின்றனர்.

படத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் பரிசுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தயாராகியுள்ள 'கிரிஷ்ணம்' படத்திற்கு தங்கக் காசு பரிசு போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான உண்மை சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும். அந்த சம்பவம் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஒரு அற்புத அனுபவமாக இருக்க வேண்டும்.
அந்த வீடியோவை பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக் , ஷேர் சாட், டிக் டாக், மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு வரப்பெறும் வீடியோக்களை ஆய்வு செய்து, அதில் சிறந்த வீடியோவை தேர்வு செய்து ஐந்து கிராம் தங்கக் காசு பரிசாக வழங்கப்படும். இவ்வாறு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ்ணம் படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்களை டிக்டாக், மியூசிக்கலி, டப்ஸ்மாஷ் செய்து அனுப்புவோருக்கு ஐந்து கிராம் தங்கக் காசு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் 'கிரிஷ்ணம் 'படம் உருவாகியுள்ளது. பிஎன்பி தயாரித்துள்ள இப்படத்தில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.