»   »  இந்த நடிகையை பார்த்து பாலிவுட் நடிகைகளின் கண், காதில் ஏன் புகை வருகிறது?

இந்த நடிகையை பார்த்து பாலிவுட் நடிகைகளின் கண், காதில் ஏன் புகை வருகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆமீர் கான் நடிக்க உள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் க்ரிட்டி சனோன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் தங்கல் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரிலீஸான இரண்டே நாட்களில் அதுவும் இந்தியாவில் மட்டுமே ரூ.100 கோடி வசூலித்துவிட்டது.

Kriti Sanon to act with Aamir Khan?

ஆமீர் அடுத்ததாக தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பாலிவுட் ஜாம்பவானான அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

ஆமீருடன் ஜோடி சேர நடிகைகள் போட்டி போடுகிறார்கள். இந்நிலையில் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் க்ரிட்டி சனோன் ஹீரோயினாக நடிக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சிலர் செய்த அட்டூழியங்கள் பற்றிய கதையாம். முதல் முதலாக ஆமீரும், அமிதாபும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரிட்டி சனோனுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதை நினைத்து பல நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.

English summary
According to reports, Kriti Sanon is likely to act in Aamir Khan's next movie Thugs of Hindostan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil