Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிரபாஸை திருமணம் செய்ய விரும்புகிறேன்..நச்சுனு ஆசையை சொன்ன நடிகை..இப்போ டேட்டிங் போனது உண்மையா?
சென்னை : பாகுபலி நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டியில் கூறி உள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது.
தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே பரீச்சியமான நடிகராக இருந்த பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா மட்டுமில்லாமல் இந்தியா தாண்டியும் பிரபலமானார்.
தெலுங்கு, தமிழைத் தாண்டி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
என் கையை பிடிச்சி பி & சி மக்கள்கிட்ட கூட்டிட்டு போங்கண்ணே என ராஜ் கிரணிடம் சொன்ன நடிகர்

நடிகர் பிரபாஸ்
அசாத்தியமான நடிப்பு, பிரம்மிப்பில் ஆழ்த்திய சண்டை காட்சி, துணிச்சல், அழகு என அனைத்தையும் பாகுபலி படத்தில் கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருந்தார் பிரபாஸ். இந்த படம் வெளியான போது சுமார் 6 ஆயிரம் பெண்கள், நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பிரபாசை திருமணம் செய்து கொள்ள காத்திருந்தனர். ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்துவிட்டு தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே இருந்தார்.

அனுஷ்காவுடன் கிசுகிசு
பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த படவாய்ப்பு நடிகை ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

எப்போது திருமணம்
சினிமா வட்டாரத்தில் அனைவரும் எப்போது திருமணம் என கேட்டு வந்த நிலையில், திருமணம் குறித்து வாய்திறக்காமல் இருக்கும் பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தின் நாயகி க்ரித்தி சனோனுடன் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் உறவை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.

கிரித்தி சனோன்
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கிரித்தி சனோன், அதில் நடிகர்கள் டைகர் ஷெராஃப், கார்த்திக் ஆர்யன் மற்றும் பிரபாஸ் இவர்களில் யாருடன் டேட்டிங் செய்ய விருப்பம், யாருடன் நெருங்கி பழக விருப்பம், யாரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என கேள்வி கேட்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்ள ஆசை
இதற்கு பதிலளித்த, கிருத்தி சனோன் கார்த்திக் ஆர்யனுடன் ஊர்சுற்ற விரும்புகிறேன், டைகர் ஷெராஃப் உடன் பழகுவேன் என்ற ஆசை இருக்கிறது. அதே போல நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பளீச் என்று பதில் அளித்தார். ஏற்கனவே டேட்டிங் வதந்தி பரவி வரும் நேரத்தில், நடிகை இவ்வாறு பதிலளித்து இருப்பது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலாகி உள்ளது.