»   »  போதைக்கு அடிமை, பலமுறை தற்கொலைக்கு முயன்றார் நடிகை க்ரித்திகா: தோழி பரபர பேட்டி

போதைக்கு அடிமை, பலமுறை தற்கொலைக்கு முயன்றார் நடிகை க்ரித்திகா: தோழி பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை க்ரித்திகா சவுத்ரியின் திருமண வாழ்க்கை கசந்து போன பிறகு அவர் போதைப் பொருளுக்கு அடிமையானதாகவும், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகை க்ரித்திகா சவுத்ரி மும்பையில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை யாரோ தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து க்ரித்திகாவின் தோழி ஒருவர் கூறியிருப்பதாவது,

காதல்

காதல்

க்ரித்திகா டெல்லியில் வேலை செய்தபோது தன்னுடன் பணியாற்றிய ஒருவரை காதலித்தார். அவர்கள் திருமணம் செய்ய தீர்மானித்தபோது தான் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமானது க்ரித்திகாவுக்கு தெரிய வந்தது.

திருமணம்

திருமணம்

அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு க்ரித்திகாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பைக்கு வந்தனர். அந்த நபர் க்ரித்திகாவுக்கு துரோகம் செய்தார்.

பிரிவு

பிரிவு

க்ரித்திகா தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு நான் மாடலிங் வேலை கொடுத்தேன். அவர் போதைப் பொருளுக்கு அடிமையானதை கண்டுபிடித்தேன்.

வேண்டாம்

வேண்டாம்

போதைப் பொருள் பயன்படுத்தாதே அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது இல்லை என்று நான் க்ரித்திகாவை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. போதைப் பொருள் இல்லாமல் அவரால் இருக்க முடியாது.

தற்கொலை

தற்கொலை

க்ரித்திகா பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது இடது கையில் பிளேடால் கீரிய அடையாளம் நிறைய இருக்கும். அவர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாரா என தெரியவில்லை.

டெல்லி

டெல்லி

நான் தற்போது டெல்லியில் வசித்து வருகிறேன். க்ரித்திகாவுடன் பேசி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. போலீசார் என் வீட்டை தேடி வந்தபோது தான் க்ரித்திகாவின் விவகாரம் தெரிய வந்தது என்றார் அந்த தோழி.

English summary
Actress Kritika Choudhary's friend said that she was a drug addict and attempted suicide many times by slitting her left wrist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil