»   »  அசின் பாலிவுட்டை விட்டு வெளியேறுவது நல்ல முடிவு.. சந்தோஷிக்கும் நடிகர்!

அசின் பாலிவுட்டை விட்டு வெளியேறுவது நல்ல முடிவு.. சந்தோஷிக்கும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அசின் திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டை விட்டு வெளியேறும் முடிவு மிகவும் நல்ல முடிவு என இந்தி நடிகர் கமால் ஆர் கான் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் அசின். கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தார். இளையதளபதி விஜய்க்கு ஏற்ற ஜோடி அசின் என்று பெயர் எடுத்தார். இந்நிலையில் அவர் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த கஜினி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்தார்.

இந்தி ரீமேக்கில் அசினை நடிக்க வைத்து அவரை பாலிவுட் அழைத்துச் சென்றார் முருகதாஸ்.

பாலிவுட்

பாலிவுட்

கஜினி இந்தி ரீமேக் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அசினின் நடிப்பையும் பலரும் பாராட்டினர். இதை பார்த்த அவர் கோலிவுட்டுக்கு டாட்டா காண்பித்து விட்டு மும்பையில் தங்கி இந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.

விரோதம்

விரோதம்

பாலிவுட் நாயகிகளுக்கும் அசினுக்கும் ஒத்துப் போகவில்லை என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின. மேலும் மும்பையில் தென்னிந்திய நடிகைகள் யாரையாவது பார்த்தாலும் அசின் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார் என கூறப்பட்டது.

மவுசு இல்லை

மவுசு இல்லை

2008ம் ஆண்டு பாலிவுட் சென்ற அசின் இதுவரை வெறும் 7 படங்களில் தான் நடித்துள்ளார். அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு 2 ஆண்டுகளுக்கு மேல் இழுத்து ஒருவகையாக தற்போது தான் முடிந்துள்ளது. பாலிவுட்டில் அசினுக்கு மவுசு இல்லை இருப்பினும் அவர் மும்பையில் தான் இருக்கிறார்.

திருமணம்

திருமணம்

படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் அசின் தனது காதலரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனருமான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் பாலிவுட்டை விட்டு வெளியேறவும் தீர்மானித்துள்ளார்.

நல்ல முடிவு

அசின் பற்றி பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் அதாங்க கேஆர்கே ட்விட்டரில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசினின் முடிவு மிகவும் நல்ல முடிவு ஆகும். வயதான பெண்களை ஹீரோயின்களாக பார்க்க மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வழக்கம்

வழக்கம்

கேஆர்கே யாராவது ஹீரோயினை வம்பிழுத்துக் கொண்டே இருப்பார். இன்றைக்கு அசின் சிக்கியுள்ளார். கேஆர்கே யாராவது நடிகையை வம்பிழுத்து திட்டு வாங்குவது புதிது அன்று.

English summary
Bollywood actor KRK tweeted that, 'It's very good decision by Asin in Budhapa who decided to get married to leave Bollywood. Public don't want to watch old girls as heroines.'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil