»   »  பார்ரா தல, தளபதி வெயிட்டிங்கில் இருக்கும்போது 'இவரு' சூப்பர் ஸ்டாராம்ல!

பார்ரா தல, தளபதி வெயிட்டிங்கில் இருக்கும்போது 'இவரு' சூப்பர் ஸ்டாராம்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று இங்கு ஒரு குட்டிப் போரே நடந்து கொண்டிருக்கும் போது பாலிவுட் நடிகர் கேஆர்கே தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.

எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது எங்க தலைவர் தான் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதியே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

KRK calls himself a super star

இல்லை இல்லை எங்க தல தான் சூப்பர் ஸ்டார் என கோதாவுக்கு வருகிறார்கள் அஜீத் ரசிகர்கள். சூப்பர் ஸ்டார் பட்டமா அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என அஜீத் ஒதுங்கியிருந்தாலும் அவருக்கு பதில் அவரது ரசிகர்கள் வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

இந்த சூப்பர் ஸ்டார் கோதாவில் அவ்வப்போது விக்ரம், சூர்யா ரசிகர்களும் குதிப்பது உண்டு. இந்நிலையில் நான் நம்பர் ஒன் விமர்சகர் என்று தானாக கூவி வரும் பாலிவுட் நடிகர் கேஆர்கே உலக நாயகன் கமல் ஹாஸனை வம்பிழுத்ததும் இல்லாமல் சந்து கேப்பில் தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என்று வேறு கூறியுள்ளார்.

அழகில்லாத ரஜினி சூப்பர் ஸ்டாரா என்று அவர் கேட்டதற்கே தலைவர் ரசிகர்கள் அவர் மீது கொலவெறியில் உள்ளனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு.

English summary
Bollywood actor KRK calls himself a super star in the tweet in which he made fun of Kamal Haasan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil