»   »  சோட்டா பீம் மாதிரி இருக்கும் இவர் பீமரா?: மோகன்லாலை நக்கலடித்த நடிகர்

சோட்டா பீம் மாதிரி இருக்கும் இவர் பீமரா?: மோகன்லாலை நக்கலடித்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் விமர்சகரும், நடிகருமான கமால் ஆர். கான் அதாங்க கேஆர்கே மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சோட்டா பீம் என்று கூறி சேட்டன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சிகர் என்று சுயதம்பட்டம் அடித்து வருபவர் கேஆர்கே எனப்படும் கமால் ஆர் கான். ட்விட்டரில் யாரையாவது வம்பு இழுக்கவில்லை என்றால் அவருக்கு பொழுதே போகாது.

இதையே ஒரு பொழப்பாக வைத்துள்ளார்.

ரஜினி

ரஜினி

கருப்பாக பார்க்க அழகில்லாமல் இருக்கும் ரஜினிகாந்த் எல்லாம் ஒரு சூப்பர் ஸ்டாரா என்று ட்வீட் போட்டு தலைவரின் ரசிகர்களிடம் செமத்தியாக திட்டு வாங்கியவர் தற்போது மோகன்லாலை வம்பிழுத்துள்ளார்.

மகாபாரதா

மகாபாரதா

மகாபாரதத்தை தழுவி எடுக்கப்படும் படத்தில் பீமராக நடிக்கிறார் மோகன்லால். இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 1000 கோடி ஆகும். இதை வைத்து தான் கேஆர்கே கிண்டல் செய்துள்ளார்.

சோட்டாபீம்

மோகன்லால் சார், நீங்கள் பார்க்க சோட்டா பீம் போன்று இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது மகாபாரதாவில் எப்படி பீமாக நடிப்பீர்கள்? பி. ஆர். ஷெட்டியின் பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என்று ட்வீட்டியுள்ளார் கேஆர்கே.

திட்டு

திட்டு

மோகன்லாலை சோட்டா பீம் என்று கூறிய கேஆர்கேவை அவரின் ரசிகர்கள் கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள். நாகரீகம் கருதி அதை இங்கு தெரிவிக்கவில்லை.

English summary
Kamal R Khan tweeted that, 'Sir Mohanlal you look like Chota Bheem so then how will u play role of Bheem in Mahabharata? Why do you want to waste money of B R shetty?'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil