»   »  பாகுபலி 2லாம் ஒரு படமா? பிரபாஸ் ஒட்டகம் போல இருக்கார்: நடிகர் திமிர் பேச்சு

பாகுபலி 2லாம் ஒரு படமா? பிரபாஸ் ஒட்டகம் போல இருக்கார்: நடிகர் திமிர் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒட்டகம் போன்று இருக்கும் பிரபாஸை தங்கள் படங்களில் எடுக்கும் இந்தி தயாரிப்பாளர் முட்டாள்கள். பாகுபலி வேலை செய்யவில்லை பிரபாஸ் என்று இந்தி, நடிகரும், விமர்சகருமான கேஆர்கே தெரிவித்துள்ளார்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதை வசூல் வேட்டை முழு வீச்சில் நடக்கும்.


இந்நிலையில் தன்னை தானே நம்பர் ஒன் விமர்சகர் என்று தம்பட்டம் அடிக்கும் இந்தி நடிகர் கேஆர்கே பாகுபலி 2 மற்றும் பிரபாஸை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


பிரபாஸ்

ஒட்டகம் போன்று இருக்கும் பிரபாஸை தங்கள் படங்களில் எடுக்கும் இந்தி தயாரிப்பாளர்கள் முட்டாள்கள். பாகுபலி வேலை செய்யவில்லை பிரபாஸ்.


பாகுபலி 2

பாகுபலி 1 என்னை தென்னிந்திய படங்களை பார்க்கத் தூண்டியது. ஆனால் பாகுபலி 2 பார்த்த பிறகு இனி தென்னிந்திய படங்களை பார்ப்பது இல்லை என முடிவு செய்துள்ளேன்.


படம்

சிலர் படத்தை புரிந்து கொள்ள பாகுபலி 2-வை 3-4 தடவை பார்க்கிறார்களாம். அது இவ்வளவு மோசமாக இருந்தும் மக்களுக்கு ஏன் இப்படி ஒரு கிரேஸ்.


திட்டு

திட்டு

பாகுபலி 2 மற்றும் பிரபாஸை கடுமையாக விமர்சித்துள்ள கேஆர்கேவை பலரும் ட்விட்டரில் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Bollywood critic KRK blasted Rajamouli's magnum opus Baahubali 2 and called Prabhas a camel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil