»   »  ரெமோ டீமுக்கு கேஎஸ் ரவிக்குமார் தந்த இன்ப அதிர்ச்சி!

ரெமோ டீமுக்கு கேஎஸ் ரவிக்குமார் தந்த இன்ப அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது எல்லாத் திரைப்படங்களிலும் கடைசிக் காட்சியிலாவது தோன்றுவது இயக்குநர் கே எஸ் ரவிகுமாரின் வழக்கம். அது மிகவும் ராசியானது என்றும் கூறப்படுவது உண்டு.

இப்போது அவர் சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும், 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் 'ரெமோ' படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரவிகுமார் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு , படப்பிடிப்புக் குழுவினரை பரவசப்படுத்தி இருக்கிறது.

KS Ravikumar gave sweet shock to Remo team

ரெமோ படத்தில் ஒரு நடிகராக அவருக்கு கொடுக்க வேண்டிய தொகையை, தினசரி சம்பளமாக அவருக்கு கொடுத்து விடுவது தயாரிப்பு நிர்வாகத்தின் வழக்கம். அந்த வழக்கப்படியே ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் , ரவிக்குமாருக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்த பின்னர் தயாரிப்பு நிறுவனத்தினர் அலுவகம் திரும்பினர்.

சற்று நேரத்தில் ரவி குமாரிடம் இருந்து ஒரு அழைப்பு. 'இன்னைக்கு நான் மொத்தமா ஒரு மணி நேரம் கூட நடிக்கல , அதுக்கு எதுக்கு முழு நாள் சம்பளம்? என்றுக் கேட்டார்.

'அது அரை நாள் வேலைதான் சார், ஆனா நீங்க ஒரு மணி நேரத்துல முடிச்சுட்டீங்க' என்று தயாரிப்பு தரப்பில் கூற, 'அதெல்லாம் முடியாது , தயாரிப்பாளர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும், தயவு செஞ்சு இந்தப் பணத்தில் பாதியை வாங்கிகோங்க' என்று சற்றே கண்டிப்பான தொனியில் கூற, வேறு வழியின்றி தயாரிப்பு நிர்வாகமும் பாதியை வாங்கிக் கொண்டனர்.

"இப்படி ஒரு மனிதரை திரை உலகில் சந்திப்பது மிக அரிது. இந்த நல்ல குணமே அவரை இந்த உயரத்துக்கு உயர்த்தி சென்று உள்ளது. மனிதநேயமும், தொழிலில் பக்தியும், நேர்மையும் உள்ள ரவிக்குமார் எங்கள் படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை," என்று நெகிழ்சியோடுக் கூறினார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.

English summary
Director K S Ravikumar who playing a key role in Sivakarthikeyan's Remo has gave a sweet shock to the crew by returning half of his salary money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil